உள்ளடக்கத்துக்குச் செல்

நாவிதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாவிதர் அல்லது அம்பட்டன்
வகைப்பாடுமிகவும் பிற்படுத்தப்பட்டோர்
மதங்கள் இந்து
மொழிகள்தமிழ், தெலுங்கு
மக்கள்தொகை
கொண்ட
மாநிலங்கள்
தமிழ்நாடு
உட்பிரிவுகள்மருத்துவர், நாவிதர், மங்களா
தொடர்புடைய குழுக்கள்தமிழர், இலங்கைத் தமிழர்

நாவிதர் (பொதுவாக மருத்துவர் என்றும் அழைக்கப்படுகின்றனர்)[1] எனப்படுபவர் தமிழகத்தில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். தமிழகத்தில், நாவிதர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு வேறுபட்ட மொழியியல் குழுக்களாக வாழுகின்றனர். தெலுங்கு பேசும் நாவிதர்கள் மங்களா என்ற பெயரில் அழைக்கப்படுகின்றனர்.[2] [3] இவர்கள் கிராமப்புற மருத்துவர்களாகவும்,[4] ஒப்பனைத் தொழில் செய்பவர்களாகவும் இருந்து வருகின்றனர்.

சொற்பிறப்பு

நாவிதர் என்ற சொல் நாவிகர் என்ற தமிழ் வார்த்தையிலிருந்து உருவானது, இதற்கு புனித மனிதன் என்று பொருளாகும். இவர்கள் மருத்துவர், பரியாரி, வைத்தியர் என்ற பெயராலும் அறியப்படுகின்றனர். இவை அனைத்தும் மருத்துவர்களுக்கான ஒத்த சொற்கள் ஆகும்.[5][6]

மக்கள்தொகை

தமிழகத்தில் மருத்துவர், நாவிதர், மங்களா, என்று சொல்லப்படுகின்ற வகுப்பினர் 4 லட்சத்து 26 ஆயிரத்து 427 பேர் வசிக்கின்றனர்.[7][தொடர்பிழந்த இணைப்பு][சான்று தேவை] இவர்கள் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு சாதிகள் பட்டியலில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

வரலாற்றுத் தகவல்

ஆரம்பகால தமிழ் வரலாறு

சித்தி பெற்றதாகக் கூறும் பண்டைய தமிழ் மருத்துவர்களான சித்தர்கள், பெரும்பாலும் நாவிதர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.[8]

இலங்கை

இலங்கை நாவிதர் நாட்டுப்புறக் கதைகளின்படி, அவர்கள் யாழ்ப்பாண இராச்சியத்திற்கு போர்வீரர்களின் உதவியாளர்களாக வந்தனர். அவர்கள் தங்கள் மனைவிகள் இல்லாமல் வந்ததால், அவர்கள் இலங்கை வெள்ளாளர் பெண்களை மணந்தனர்.[9]

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழ்நாடு சாதிகள் பட்டியல்" (PDF). pdf
  2. ஏ.என். சட்டநாதன், ed. (1970). தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலக்குழு அறிக்கை. தமிழ்நாடு அரசு வெளியீடு. p. 49. Mangalas are the Telugu - speaking people of this community {{cite book}}: no-break space character in |quote= at position 17 (help)
  3. தேமொழி, ed. (மார்ச் 2018). எங்கள் வாழ்வும் எங்கள் வளமும். அறிவொளி பதிப்பு. p. 158. தெலுங்கு மொழியில் நாவிதரை மங்கல என அழைப்பார்கள் {{cite book}}: no-break space character in |quote= at position 9 (help)CS1 maint: year (link)
  4. Dr. S.Soundarapandian, ed. (1995). Descriptive Catalogue of the Telugu Manuscripts in the Government Oriental Manuscripts Library, Madras-5: D. nos. from 2658 to 3284 and Mackenzie vols. no. 251 to 252. Government Oriental Manuscripts Library (Tamil Nadu, India). p. 12. The main community that practising the siddha medical SCience was 'Navithar {{cite book}}: no-break space character in |editor1-last= at position 4 (help)
  5. Béteille, André; Beteille, Professor Emeritus of Socio Logy Andre (1965). Caste, Class, and Power: Changing Patterns of Stratification in a Tanjore Village (in ஆங்கிலம்). University of California Press. p. 89. ISBN 9780520020535.
  6. General, India Office of the Registrar (1966). Census of India, 1961: Madras (in ஆங்கிலம்). Manager of Publications. p. 7.
  7. "அனைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதிகளின் அதிகாரபூர்வ மக்கள்தொகை முதல்-அமைச்சர் கருணாநிதி விளக்கம்". விகடன் (சூலை 10, 2009)
  8. State), Madras (India; Baliga, B. S.; Bahadur.), B. S. Baliga (Rao (1999). Madras District Gazetteers: Tiruchirappalli (pt. 1-2) (in ஆங்கிலம்). Superintendent, Government Press. p. 1447.
  9. David, Kenneth (2011-06-03). The New Wind: Changing Identities in South Asia (in ஆங்கிலம்). Walter de Gruyter. p. 189. ISBN 9783110807752.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாவிதர்&oldid=4476039" இலிருந்து மீள்விக்கப்பட்டது