சிவானந்த மௌன குரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீ-ல-ஸ்ரீ-சித்தர் சிவானந்த மௌன சுவாமிகள்
Sri Sivanandha guru
பிறப்பு(1965-03-09)9 மார்ச்சு 1965
வட ஆற்காடு, தமிழ் நாடு,  இந்தியா
இறப்புசனவரி 1, 1988(1988-01-01) (அகவை 22)
திருவலம்,வேலூர்,  இந்தியா
இயற்பெயர்சின்னையா மேஸ்திரி

சிவானந்த மௌன குரு சுவாமிகள்,தென்னிந்திய ஆன்மிக குரு.திருமணத்திற்குப் பின் இல்லறத்தைத் துறந்து மகாதேவ மலைக்குச் சென்று தவம் மேற்கொண்டார் திருச்செந்தூரில் உள்ள மூவர் சமாதியைக் கண்ட பின் சித்தஞானம் பெற்று முற்றும் துறந்து துறவு மேற்கொண்டார்,ருசி,பசி,தாகம் தண்ணீர் இன்றி குளிக்காமல் ஸ்நானம் விட்ட நிலையில் கோவணமாகக் கோணிப் பட்டையை அணிந்து 14 வருடங்கள் யாருடனும் பேசாமல் மௌனமாகவே இருந்து வந்ததால் மக்கள் அவரை "மௌனகுரு சுவாமிகள்",என்று அழைக்கத் தொடங்கினர்,பின்னர் காரணம் பட்டி செல்லியம்மன் ஆலயம் வந்து அங்கு பல அதிசயங்கள் நடத்திய பின் கந்தக் கடவுள் சுவாமிகளின் கனவில் தோன்றி 108 வியாதிகளையும் குணப்படுத்தும் வகையில் விபூதியும் வில்வமும் மக்களுக்கு வழங்கும்படி உத்தரவானது.சுவாமிகள் தன் திருக்கரங்களால் தந்த வில்வ இலை விபூதியால் தீராத பல கொடிய நோய்களும் குணமானது.அதனால் பெற்ற காணிக்கைகளைக் கொண்டு பல திருக்கோவில்களில் திருப்பணிகள் செய்து வந்தபோது தீபாவளி அன்று நோன்பு தினத்தில் திருவலம் திருத்தலத்தில் திருப்பணி செய்யும் படி உத்தரவானது திருச்செந்தூர் முருகனின் பன்னீர் இலை விபூதி ஔஷதமானதைப் போல் சுவாமிகளின் வில்வ இலை விபூதியும் சிறந்ததொரு ஔஷதமானது கந்தனின் கட்டளையின்படி திருக்கோவிலில் திருப்பணி செய்து வந்தபோது இமயம் முதல் குமரி வரை உள்ளவர்களுக்கும் வெளி நாடுகளிலிருந்து வந்தவர்களுக்கும் தீராத நோய்களைத் தீர்த்து வைத்து வந்தார்[1][2][3]

வாழ்க்கை குறிப்பு[தொகு]

திருவல்லம் வில்வநாதேசுவரர் கோயில் வளாகத்தில் காணப்படும் செப்பேடு சாசனம்

வட ஆற்காடு மாவட்டம் குடியாத்தம் தாலூக்கா காரணாம்பட்டு கிராமம் வண்ணார் குலம் வீரபத்திரர் கோத்திரத்தில் குள்ளப்ப மேஸ்திரிக்கும், அம்மணி அம்மாளுக்கும் மகனாக தோன்றினார்.

சமூக சேவைகள்[தொகு]

திருவலம் தேவஸ்தான தெப்பக்குளம் அருகில் உள்ள ஸ்ரீ ராக்காத்தம்மன் கோயில் தரை மராமத்து குகாஸ்ரமம் நந்தவனம் அமைத்தல் ஆகிய திருப்பணிகளை முடித்தபின் அர்த்தநாரீசுவரர் கோயிலில் தங்கி இருந்த சமயம் தீபாவளி நோன்புதினம் தொடங்கி திருவலம் தேவாலயத் திருப்பணி செய்யும்படி உத்தரவானது அக்கட்டளைபடி செய்து வந்த தொண்டினால் இமயம் முதல் குமரி வரை உள்ளவர்களும் வெளிநாட்டினர்களும் வந்து தீராத நோய்கள் தீர்ந்து நலமடைந்தனர் அதனால் பல இலட்சக்கணக்கில் பணம் குவிந்தது திருவலம் தேவாலயத் திருப்பணித் தொண்டர் சிவானந்த மௌன சுவாமிகள் என்ற பெயரும் வந்தது மகான்களாலும் பல்லவ பாண்டிய மன்னர்கள் பலராலும் கட்டி முடிவுபெராமல் இருந்த கோயில் திருப்பணிகள் பல செய்து முடிக்கப்பட்டன திருப்பணிகள் விபரம் மகாமதில் கௌரி தீர்த்தத் திருக்குளம் தளவரிசை பதினோரு கோபுரங்கள் முதலியவைகளைப் புனருத்தாரனம் செய்தும் கோபுரங்களில் 27 செப்புக்கலசங்கள் அமைத்தும் பழுதுபட்டுக்கிடந்த தேர்களையும் வாகனங்களையும் புதுப்பித்தும் தேர்களை நிறுத்துவதற்காகப் பெருந்தொகை செலவில் இரும்பு கர்டர் ஜிங்க்ஷீட் கொட்டகை அமைத்தும் மிகுந்தசெலவில் பட்டுத்துணியால் தேர்சீலைகள் தைத்தும் முன் கோபுரத்தின் புராதன ஐதீகக் சின்னங்களைப் புதுப்பித்தும் மண்டபங்களின்மேல் தளத்தில் திருக்கைலாயக் காட்சி முதலான பல புராணக் காட்சித் திருவுருவங்கள் அமைத்தும் சீர்குலைந்து போன துவஜஸ்தம்பத்தை நீக்கி புதிய கம்மபம் அமைத்து அடி முதல் முடிவரை செப்புத்தகடு பொருத்தியும் அறுபத்து மூன்று சிவனடியார்களின் கற்சிலா மூர்த்திகளை ஸ்தாபித்தும் தொகை அடியார்களுடன் 72 அடியவர்களின் பஞ்சஉலோக மூர்த்திகள் வார்த்தும் கைலாயக்காட்சி விமானம் செய்தும் வேண்டிய இடங்களில் இரும்புக்கம்பிகளால் வேலி அமைத்தும் ஏற்கனவே அடியேனுடைய கனவில் அம்பிகேஸ்வரி தோன்றி அறிவித்தபடி பூமியில் அம்பிகையும் இலிங்கமும் கண்டு எடுக்கப்பட்டு பதினாறுகால் மண்டபம் பஞ்ச கலச கோபுரம் ஐதீகச் சின்னங்களுடன் புதியதாக அம்பிகேஸ்வரி சமேத ராஜேஸ்வரர் ஆலயம் கட்டி அதற்கென நித்ய பூசைகட்கு ஏற்பாடு செய்தும் காடாய் இருந்த இடத்தை நந்தவன ஆஸ்ரமாக அமைத்தும் மின்சாரமில்லதிருந்த ஊருக்கு மின்சாரம் வரவழைத்து கோயில் முழுவதும் ஒளிமயமாக்கியும் சங்கு பம்புசெட்டு ஒலிபெருக்கிகள் அமைத்தும் கோயில் முழுவதும் வர்ணங்கள் தீட்டியும் இத்தகைய அறிய திருப்பணிகள் செய்து முடித்து பேய்க்கரும்பு இனித்தால்தான் கும்பாபிஷேகம் செய்வது என நான்காண்டுகள் வரை திருபணிசெய்து ஆண்டவன் திருவருள்படி பேய்க்கரும்பு இனித்ததால் 14-1-63 அன்று உலக மக்கள் மகாகும்பாபிஷேகம் திருவலம் ஸ்ரீ வில்வனாதேஸ்வரப் பெருமானுக்கும் சகல மூர்த்திகளுக்கும் யாகசாலை ஓமகுண்டம் முதலிய சகல வைபவங்களுடன் நடைபெறச் செய்து அன்று தொடங்கி 48 நாட்கள் கும்பாபிஷேகமும் அந்நாட்களில் நாள்தோறும் ஐயாயிரம் மக்களுக்கு அன்னதானம் அளித்தும் பல ஆண்டுகள் நின்று விட்டிருந்த விழாக்களை நடத்தியும் மூன்றாண்டுகள் வரை கும்பாபிஷேகமப் பெருவிழாவும் நடத்தி முடிவுற்றன பின்னர் கோயில் மதிற்புறத்தில் பசுமண்டபமும் கோபுரதின்முன்பு இரும்புக்கம்பங்கள் அமைத்து ஜிங்க்ஷீட்டினால் பந்தலும் அமைக்கப்பட்டன[4][5]

இறப்பு[தொகு]

சித்தர் சிவானந்த சுவாமிகள் நினைவுபதாகை

சித்தர் சிவானந்த மௌன குரு சுவாமிகள் 1988ஆம் ஆண்டு மாலை ஜீவசமாதி அடைகிறார்,அவரின் ஜீவசமாதியானது திருவல்லம் வில்வநாதேசுவரர் கோயில்யில் காணப்படுகிறது,மேலும் இவர் திருத்தணி,திருப்பதி,கந்தகோட்டம் போன்ற இடங்களில் வகிக்கும் கோவில்களுக்கு வெள்ளி,தேர் மற்றும் மரதேர் செய்து கொடுத்துள்ளார்

வெளி இணைப்புக்கள்[தொகு]

  1. Dr.Balasubramanian, தொகுப்பாசிரியர் (2017). Glory of Arunachalam. notion Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781948352574. https://books.google.com/books?id=JdtTDwAAQBAJ&dq=sivananda+mouna+swamigal+thiruvalam&pg=PT42. 
  2. the University of Virginia, தொகுப்பாசிரியர் (1978). Kisan World,Volume 5. Sakthi Sugars,Limited. பக். 7. https://books.google.com/books?id=S0ZQAAAAYAAJ&q=mouna+swamigal+. 
  3. ivan benjamin, தொகுப்பாசிரியர் (2021). The Tao of Quantum Living: The Link Between Yogic Science and Quantum Science. Notion press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781639046584. https://books.google.com/books?id=KKkxEAAAQBAJ&dq=sivananda+mouna+swamigal&pg=PT143. 
  4. Pon Paramaguru, தொகுப்பாசிரியர் (1992). Nān̲ kaṇṭa Cittarkaḷ. Vān̲ati Patippakam. பக். 258. https://books.google.com/books?id=LjkFAQAAIAAJ&q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D. 
  5. baskara thondaiman, தொகுப்பாசிரியர் (1999). Vēṅkaṭam mutal kumari varai,Volume 5. Cuppiramaṇya Piḷḷai. பக். 30. https://books.google.com/books?id=6pZLAAAAMAAJ&q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவானந்த_மௌன_குரு&oldid=3381320" இலிருந்து மீள்விக்கப்பட்டது