கோரேகான் பீமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோரேகான் பீமா
कोरेगाव-भिमा
Koregaon (कोरेगाव)
சிற்றூர்
கோரேகான் பீமா is located in மகாராட்டிரம்
கோரேகான் பீமா
கோரேகான் பீமா
மகாராஷ்டிராவில் கோரேகான் பீமா கிராமத்தின் அமைவிடம்
கோரேகான் பீமா is located in இந்தியா
கோரேகான் பீமா
கோரேகான் பீமா
கோரேகான் பீமா (இந்தியா)
ஆள்கூறுகள்: 18°38′44″N 074°03′33″E / 18.64556°N 74.05917°E / 18.64556; 74.05917ஆள்கூறுகள்: 18°38′44″N 074°03′33″E / 18.64556°N 74.05917°E / 18.64556; 74.05917
நாடு இந்தியா
மாநிலம்மகாராஷ்டிரா
மாவட்டம்புனே மாவட்டம்
தாலுகாசிரூர் தாலுகா
அரசு
 • வகைசிற்றூர்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்13,116
Languages
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-MH
இணையதளம்pune.nic.in

கோரேகான் பீமா (Koregaon Bhima) என்பது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே மாவட்டத்தில் உள்ள சிரூர் தாலுகாவின்பீமா ஆற்றாங்கரையில் அமைந்த சிற்றூர் ஆகும். 2011-இல் இதன் மக்கள்தொகை 13,116 ஆகும்.

கோரேகான் பீமா ஊரில் 1818-இல் மராத்திய பேஷ்வா படைகளுக்கும் - கிழக்கிந்தியக் கம்பெனி படைக்களுக்கும் இடையில் போர் நடைபெற்றது. போரில் கிழக்கிந்தியக் கம்பெனிப் படையில் படைவீரர்களாக இருந்த 49 தலித்துகள் மரணமடைந்தனர். போரில் கொல்லப்பட்ட 49 தலித்துகளின் பெயரைக் கொண்ட நினைவுத்தூண் ஒன்றை கம்பெனி ஆட்சியினர் நிறுவினர். ஆண்டு தோறும் தலித் மக்கள் இந்நினைவிடத்தில் கூடி, போரில் இறந்தவர்களுக்கு வழிபடு விழாவை நடத்திவருகின்றனர். இது இருநூறு ஆண்டுகாளாக நடைபெறுகிறது.[1]

வரலாறு [தொகு]

மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டம் கோரேகான் பீமா கிராமத்தில் உள்ள தலித் வீரர்களின் நினைவுத்தூண்

கொரேகோன் போரானது, 1818 சனவரி 1, அன்று மராத்திய ராஜ்ஜியத்தின் இரண்டாம் பாஜி ராவின் படைகளுக்கும், உள்ளூர் தலித்துகளான மஹர் வீரர்கள் 834 பேரைக்கொண்ட பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனி படைகளுக்கிடையில் நடைபெற்றது.

பேஷ்வாவின் 28,000 பேரைக்கொண்ட வலுவான படையானது, அருகே உள்ள ஃபல்கூயனில் முகாமிட்டிருந்தது. இந்நிலையில் 834 பேரைக் கொண்ட கம்பெனி படையைத் தாக்க பேஷ்வா தனது வீரர்களில் 20,000 பேரை அனுப்பினார். அப்போது கம்பெனி படைகள் பேஷ்வாக்களின் படையினரின் தாக்குதலில் இருந்து தங்களை வெற்றிகரமாக தற்காத்துக் கொண்டது. இதனால் பேஷ்வாவின் மிகப்பெரிய படையானது ஒரு பெரிய பிரித்தானிய படை வந்தால் தோற்றுவிடுவொம் என அஞ்சி இரவில் பின்வாங்கியது.

மூன்றாம் ஆங்கிலோ-மராத்தியப் போரில் பிரித்தானிய வெற்றிக்குப் பிறகு, கோரகான் கிராமத்தில் நடைபெற்ற போர் வெற்றியை நினைவுகூரும் வகையில், கம்பெனியானது ஒரு வெற்றி நினைவுத் தூணை அமைத்தது. வெற்றித் தூணில் போரில் கொல்லப்பட்ட 49 வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டன. இதில் 22 பேர் மஹர் தலித் வீரர்கள் ஆவர்.

இந்தப் போர் வெற்றியை உயர் ஜாதி பேஷ்வாக்களின் மீதான தங்களின் வெற்றியின் ஒரு அடையாளமாக தலித் மக்கள் கருதுகின்றனர். ஆண்டுதோறும் இப்போர் நினைவிடத்தில் அதிக எண்ணிக்கையில் தலித் மக்கள் கூடி கொண்டாடுகின்றனர்.[2]

2018 ஆம் ஆண்டு சனவரி மாதம் 1 ஆம் தேதி, நகரில் பீமா கோரேகாவ் போர் வெற்றியின் 200 ஆம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் நிகழ்வில் கலந்து கொள்ள மோல்னிவாசி பகுஜன மக்கள் சென்றபோது, பகுஜன் படைகள் மற்றும் பிராமணிய சக்திகளுக்கு இடையே வன்முறை வெடித்தது. இதனால் குறைந்தது ஒருவர் மரணமடைந்து, பலர் காயமுற்றனர்.

பீமா கொரேகான் வன்முறை வழக்கு[தொகு]

1 சனவரி 2018 அன்று, கிழக்கிந்திய கம்பெனி மற்றும் மராட்டியர்களுக்கு இடையிலான போரின் 200வது ஆண்டு நினைவு நிகழ்ச்சியை ஒட்டி பீமா கொரேகானில் உள்ள வெற்றித் தூண் அருகே ஆயிரக்கணக்கான தலித்கள் கூடியிருந்தனர். அப்போது பெரிய அளவில் வன்முறை வெடித்தது. கலவரம் மற்றும் கல்வீச்சில் பல வாகனங்கள் உடைக்கப்பட்டன. வன்முறையில் ஒருவர் உயிரிழந்தார். இந்த வன்முறை தொடர்பாக சமூகப் போராளிகள், கவிஞர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 16 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனந்த் டெல்டும்ப்டே, கௌதம் நவ்லகா, கவிஞர் வரவர ராவ், ஸ்டான் சுவாமி, சுதா பரத்வாஜ், வெர்னோன் கன்சால்வஸ் மற்றும் வேறு சிலரை காவல் துறையினரும், தேசியப் புலனாய்வு ஏஜென்சியும் கைது செய்துள்ளன.[3]

மக்கள் தொகையியல்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கோரேகான் பீமா சிற்றூரின் மக்கள்தொகை 13,116 ஆகும். மக்கள்தொகையில் இந்துக்கள் 91.84%, இசுலாமியர் 5.25%, பௌத்தர்கள் 1.96%, கிறித்தவர்கள் 0.42% மற்றும் பிறர் 0.13% ஆகவுள்ளனர்.[4]

அடிக்குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரேகான்_பீமா&oldid=3086206" இருந்து மீள்விக்கப்பட்டது