நீனை அருவி
Ninai Falls | |
---|---|
![]() | |
அமைவிடம் | Sagai Village, Dediapada, Narmada, Gujarat, இந்தியா |
ஆள்கூறு | 21°40′0″N 73°49′20″E / 21.66667°N 73.82222°E |
மொத்த உயரம் | 30 அடிகள் (9.1 m) |
நீர்வழி | Narmada River |
நீனை (Ninai)(Hindi: नीनाई) என்பது இந்திய மாநிலமான குசராத்தின் நர்மதா மாவட்டத்தின் தேடியாபடா வட்டத்தில் உள்ள அருவியாகும்.
நிலவியல்
[தொகு]நீனை அருவியானது மாநில நெடுஞ்சாலை (குசராத்) 163க்கு அப்பால் அமைந்துள்ளது. இது தேடியாபடாவிலிருந்து சுமார் 35 கி.மீ. தொலைவிலும் சூரத்திலிருந்து 143 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இதன் அருகில் உள்ள ரயில் நிலையம் பாருச்சில். நீனையிலிருந்து இந்த இரயில் நிலையம் 125 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அருவியின் அருகிலுள்ள விமான நிலையமாகச் சூரத்து விமான நிலையம் உள்ளது.[1][2]
நீர்வீழ்ச்சிகள்
[தொகு]நீனை நீர்வீழ்ச்சியின் உயரம் 30 அடிக்கும் அதிகமாக உள்ளது.
புவியியல் முக்கியத்துவம்
[தொகு]நீனை அருவியைச் சுற்றி மிக அழகான வனப்பகுதி உள்ளது. தேடிபயாபடா வனச்சரக காடுகள் சூழ சூல்பன்னேசுவர் வனவிலங்கு சரணாலயப் பகுதியில் இந்த அருவி அமைந்துள்ளது. .
சுற்றுச்சூழல் சுற்றுலா திட்டம்
[தொகு]நர்மதா மாவட்ட நிர்வாகம் சர்தார் சரோவர் அணை மற்றும் அதைச் சுற்றியுள்ள பழங்குடிப் பகுதியைச் சுற்றுச்சூழல் சுற்றுலாவிற்கு ஏற்ற இடங்களாக ஊக்குவித்து வருகிறது. இந்தத் திட்டத்தில் நீனைமலை அருவிகளும் ஓர் பகுதியாக உள்ளன.[3]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gujarat Tourism". Archived from the original on 2011-10-16. Retrieved 2012-07-08.
- ↑ "Baroda Tourism". Archived from the original on 2013-11-05. Retrieved 2012-07-08.
- ↑ "Eco Tourism". Archived from the original on 2013-01-03. Retrieved 2020-10-19.