தாகோத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாகோத்
दाहोद
દાહોદ
நகரம்
நாடுஇந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்தாகோத் மாவட்டம்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்79,185
மொழிகள்
 • அலுவல் மொழிகள்குஜராத்தி, இந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சலக சுட்டு எண்389151
தொலைபேசி குறியீடு எண்91 2673
வாகனப் பதிவுGJ 20

தாகோத் (Dahod) , இந்தியா, குஜராத் மாநில தாகோத் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி மன்றமாகும். தாகோத் நகரம் துதிமதி ஆற்றாங்கரையில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் வேறு பெயர் தோஹாத். குஜராத்தி மொழியில் தோஹாத் எனில் இரண்டு எல்லைகள் கொண்டது எனப் பொருள். ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநில எல்லைப்புறத்தில் அமைந்த நகரம் தாகோத். தாகோத் நகரம், குஜராத் மாநிலதின் ஒரு முன் மாதிரி நகரமாக விளங்குகிறது. இது மொகலாய மன்னர் ஔரங்கசீப்பின் பிறந்த நகரம்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2001ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கீட்டின்படி இந்நகர மக்கள் தொகை 7,91,685 ஆகும்.[1] ஆண்கள் 52%ஆகவும், பெண்கள் 48%ஆகவும் உள்ளனர். எழுத்தறிவு விகிதம் 45.65%. இது தேசிய எழுத்தறிவு விகிதம் 59.5%ஐ விட குறைவானதாகும்.

தாகோத் சமயப் பிரிவினர்
இந்து சமயம்
75%
இசுலாம்
20%
கிறித்தவம்
0.4%
சமணம்
3.7%
பிறர்♦
0.9%
சமயப் பிரிவினர்
Includes சீக்கியம்s (0.2%).

போக்குவரத்து வசதிகள்[தொகு]

தாகோத் நகரம், இருப்புப் பாதைகள் மூலம், மும்பை, தில்லி, அகமதாபாத், போபால், இந்தூர், குவாலியர், ஜபல்பூர், உஜ்ஜையினி, ரத்லம், கான்பூர், அமிர்தசரஸ், ஜெய்ப்பூர், கோட்டா ஆகிய நகரங்களுடன் இணைக்கிறது.

சாலைகள், அகமதாபாத், வதோதரா மற்றும் இந்தூர் நகரங்களை இணைக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாகோத்&oldid=3518419" இருந்து மீள்விக்கப்பட்டது