எள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எள்
Sesamum indicum 1.jpg
எள் செடி
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம் (நிலைத்திணை)
பிரிவு: பூக்கும் தாவரம்
வகுப்பு: Magnoliopsida
வரிசை: Lamiales
குடும்பம்: Pedaliaceae
பேரினம்: எள் (Sesamum)
இனம்: S. indicum
இருசொற் பெயரீடு
Sesamum indicum (
கரோலசு லின்னேயசு

எள் (Sesamum Indicum) ஒரு மருத்துவ மூலிகை. எள்ளில் வெள்ளை, கருமை, செம்மை என மூன்று பிரிவுகள் உள்ளன. இது இந்தியா முழுதும் பயிரிடப்படும் சிறிய செடி வகையாகும். இதற்குத் திலம் என்றும் ஒரு பெயர் உண்டு (இதில் இருந்து எண்ணெய்க்குத் தைலம் என்று பெயர்). எள் விதைகளில் இருந்து பிழிந்து எள்நெய் பெறப்படுகிறது. எள்நெய் என்பதே எண்ணெய் எனபப்டுவது, ஆனால் பொதுவாக இதை நல்லெண்ணெய் என்று அழைப்பர். எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. எள் வறண்ட பகுதியிலும் வளரக் கூடியது. இதைப் பயிரிடும்போது ஒருமுறை தண்ணீர்விட்டால் போதும். பிறகு தண்ணீர் விடத் தேவையில்லை. அந்த அளவுக்கு வறட்சியைச் தாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டது.

மருந்துப் பண்புகள்[மேற்கோள் தேவை][தொகு]

 • கறுப்பு எள் அதிக மருத்துவப் பண்புகள் கொண்டது. இதில் அதிகளவு சுண்ணாம்பு சத்து நிறைந்துள்ளது.
 • வெள்ளை மற்றும் சிவப்பு எள்ளில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
 • எள்ளின் இலைகளை எடுத்து நீரில் போட்டு கசக்கினால் வழுவழுவென்று பசை இறங்கும். இந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் கண்கள் நன்கு ஒளிபெறும். கண் நரம்புகள் பலப்படும்[மேற்கோள் தேவை].
 • இதன் பூ கண்நோய்களை குணப்படுத்தும்.
 • இதன் இலைகளை நன்கு மசிய அரைத்து கட்டிகள் மேல் பூசி வந்தால் கட்டிகள் மறையும்.
 • இதன் காயையும், தோலையும் உலர்த்திச் சுட்டு சாம்பலாக்கி ஆறாத புண்கள் மீது தடவினால் புண்கள் ஆறும்.
 • எள்ளின் விதையை வெல்லப் பாகுவில் கலந்து தேங்காய் சேர்த்து சாப்பிட்டால் அல்லது எள்ளு விதையை இலேசாக வறுத்து பொடி செய்து நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் மூல நோய் குறையும்.
 • தோலில் சொறி, சிரங்கு புண்கள் உள்ளவர்கள் எள்ளு விதையை அரைத்து மேல் பூச்சாகப் பூசினால் தோல் நோய்கள் அகலும்.
 • நல்லெண்ணெயுடன் சம அளவு எலுமிச்சைச் சாறு கலந்து உடலில் பூசிக் குளித்து வந்தால் தோல் நோய்கள் அணுகாது.
 • கறுப்பு எள்ளை நன்கு காயவைத்து, இலேசாக வறுத்துப் பொடி செய்து அதனை நல்ல சூடான நீரில் போட்டு 2 மணி நேரம் ஊறவைத்து அதனுடன் தேவையான அளவு பால் மற்றும் பனைவெல்லம் சேர்த்து காலையும் மாலையும் அருந்தி வந்தால் இரத்தச்சோகை விரைவில் மாறி உடல் வலுப்பெறும்.
 • வயிற்றுப் போக்கு உள்ளவர்கள் எள்ளை வறுத்து பொடியாக்கி ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து நெய் கலந்து தினமும் மூன்று வேளை என ஆறு நாட்கள் சாப்பிட்டு வந்தால் காலரா மற்றும் தொற்றுநோயால் உண்டாகும் வயிற்றுப்போக்கு நீங்கும்[மேற்கோள் தேவை].
 • எள்ளின் இலையையும் வேரையும் அரைத்துத் தலையில் தடவி, அரை மணி நேரம் ஊறவைத்து தலை குளித்து வந்தால் முடி உதிர்தல் குணமாகும்.
 • உடற்சூடு, தலைப் பாரம் குறையும்.

எள்ளின் ஊட்டப்பொருள்களின் மதிப்பு[தொகு]

எள்ளில் 20% புரதமும் 50% எண்ணெய்யும் 16% மாப்பொருளும் உள்ளன. பின்வரும் அட்டவணை எள் வித்தின் ஊட்டப்பொருள்களின் அளவைக் காட்டுகின்றது.

தோல் நீக்கப்பட்ட வறுத்த எள் வித்தின் ஊட்டப்பொருள் மதிப்பு
100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து
ஆற்றல் 570 kcal   2370 kJ
மாப்பொருள்     26.04 g
- சர்க்கரை  0.48 g
- நார்ப்பொருள்  16.9 g  
கொழுப்பு 48.00 g
புரதம் 16.96 g
நீர் 5.00 g
உயிர்ச்சத்து சி  0.0 mg 0%
கால்சியம்  131 mg 13%
இரும்பு  7.78 mg 62%
மக்னீசியம்  346 mg 94% 
பாசுபரசு  774 mg 111%
பொட்டாசியம்  406 mg   9%
சோடியம்  39 mg 3%
Percentages are relative to US
recommendations for adults.
Source: USDA Nutrient database
தோல் நீக்கப்பட்ட உலர்த்திய எள் வித்தின் ஊட்டப்பொருள் அளவு
100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து
ஆற்றல் 630 kcal   2640 kJ
மாப்பொருள்     11.73 g
- சர்க்கரை  0.48 g
- நார்ப்பொருள்  11.6 g  
கொழுப்பு 61.21 g
புரதம் 20.45 g
நீர் 3.75 g
உயிர்ச்சத்து சி  0.0 mg 0%
கால்சியம்  975 mg 98%
இரும்பு  14.5 mg 116%
மக்னீசியம்  345 mg 93% 
பாசுபரசு  667 mg 95%
பொட்டாசியம்  370 mg   8%
சோடியம்  47 mg 3%
Percentages are relative to US
recommendations for adults.
Source: USDA Nutrient database


"https://ta.wikipedia.org/w/index.php?title=எள்&oldid=1848777" இருந்து மீள்விக்கப்பட்டது