டிரிப்டோபான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
L-டிரிப்டோபான்
ImageFile
ImageFile
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 73-22-3
பப்கெம் 6305
KEGG D00020
ATC code N06AX02
Jmol-முப்பரிமாணப் படங்கள் Image 1
பண்புகள்
மூலக்கூறு வாய்பாடு C11H12N2O2
வாய்ப்பாட்டு எடை 204.23 g mol-1
நீரில் கரைதிறன் கரைதிறன்: 0.23 கி/லி - 0 °C,

11.4 கி/லி - 25 °C,
17.1 கி/லி - 50 °C,
27.95 கி/லி - 75 °C

கரைதிறன் சூடான ஆல்கஹால் மற்றும் கார ஹைட்ராக்சைடுகளில் கரையக்கூடியது;குளோரோஃபார்மில் கரையாது.
காடித்தன்மை எண் (pKa) 2.38 (கார்பாக்சில்), 9.39 (அமினோ)[1]
வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.
Infobox disclaimer and references

டிரிப்டோபான் (Tryptophan) [குறுக்கம்: Trp (அ) W[2]] என்னும் அமினோ அமிலம் ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் புரதங்களிலிருந்தே இது பெறப்படுகிறது. ஆதலினால் இது இன்றியமையா அமினோ அமிலங்கள் (Essential Amino Acid) என்ற பிரிவினுள் அடங்கும். இதனுடைய வாய்பாடு: C11H12N2O2. மரபுக்குறியீட்டில் (Genetic code), இந்த டிரிப்டோபானுக்குரிய முக்குறியம் (Codon) UGG என்பதாகும். கட்டமைப்பு மற்றும் நொதிப் புரதங்களில் டிரிப்டோபானின் L-முப்பரிமாண மாற்றியம் மட்டுமே உபயோகிக்கப்படுகின்றது. என்றாலும், எப்போதாகிலும் D-முப்பரிமாண மாற்றியம் இயற்கையில் உருவாகும் புரதக்கூறுகளில் (Peptide) உருவாக்கப்படுகிறது (உ-ம்) கடல்சார்ந்த நச்சுப் புரதக்கூறு கான்டிரிபான்[3]. டிரிப்டோபான், இன்டோல் தொகுதியை வினைசார் தொகுதியாகக்கொண்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Dawson RMC, et al. (1969). Data for Biochemical Research. Oxford: Clarendon Press. ISBN 0-19-855338-2. 
  2. IUPAC-IUBMB Joint Commission on Biochemical Nomenclature. "Nomenclature and Symbolism for Amino Acids and Peptides". Recommendations on Organic & Biochemical Nomenclature, Symbols & Terminology etc. பார்த்த நாள் 2007-05-17.
  3. Pallaghy PK, Melnikova AP, Jimenez EC, Olivera BM, Norton RS (1999). "Solution structure of contryphan-R, a naturally-occurring disulfide-bridged octapeptide containing D-tryptophan: comparison with protein loops". Biochemistry 38 (35): 11553–9. doi:10.1021/bi990685j. பப்மெட் 10471307. 
"http://ta.wikipedia.org/w/index.php?title=டிரிப்டோபான்&oldid=1493733" இருந்து மீள்விக்கப்பட்டது