சர்க்கரையாக்க அமினோ அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சர்க்கரையாக்க அமினோ அமிலம் (glucogenic amino acid) என்னும் அமினோ அமிலத்தை குளுக்கோசு புத்தாக்கத்‌தின் (gluconeogenesis) மூலமாக குளுக்கோசாக மாற்ற முடியும்[1][2]. ஆனால், கீட்டோனாக்க அமினோ அமிலங்கள் கீட்டோன் உடலங்களாக மாற்றப்படுகின்றன.

சர்க்கரையாக்க அமினோ அமிலங்களிலிருந்து குளுக்கோசை உருவாக்க முதலில் இவை ஆல்ஃபா கீட்டோ அமிலங்களாக மாற்றப்பட்டு, பின் குளுக்கோசாக மாற்றப்படுகின்றன. இந்த இரண்டு நிகழ்வுகளுமே கல்லீரலில் நடைபெறுகின்றன. இத்தகு செயற்படு முறைகள் சிதை மாற்றத்‌தில் (catabolysis) முதன்மையாகவும், கடுமையான உண்ணா நிலையிலும், பட்டினியிலும் ஏற்றம் பெற்றும் காணப்படுகின்றன.

மனிதர்களில் இருக்கும் சர்க்கரையாக்க அமினோ அமிலங்கள்:

சர்க்கரையாக்க அமினோ அமிலங்களாகவும், கீட்டோனாக்க அமினோ அமிலங்களாகவும் இருப்பவை:

லியூசின், லைசின் அமினோ அமிலங்கள் மட்டுமே சர்க்கரையாக்க அமினோ அமிலங்களாக இல்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. Brosnan J (1 June 2003). "Interorgan amino acid transport and its regulation". J Nuitr 133 (6 Suppl 1): 2068S–2072S. பப்மெட்:12771367. http://jn.nutrition.org/cgi/content/full/133/6/2068S. 
  2. Young V, Ajami A (1 September 2001). "Glutamine: the emperor or his clothes?". J Nutr 131 (9 Suppl): 2449S–59S; discussion 2486S–7S. பப்மெட்:11533293. http://jn.nutrition.org/cgi/content/full/131/9/2449S. 

வெளியிணைப்புகள்[தொகு]