புரதக்கூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நாற்புரதக்கூறு (உதாரணமாக, வாலின்-கிளைசின்-செரைன்-அலனைன்) பச்சை அமினோ முனையையும் (வாலின்), நீலம் கார்பாக்சில் முனையையும் (அலனைன்) குறிக்கின்றன.

புரதக்கூறுகள் (Peptides) என்பவை அமினோ அமில ஒருமங்களின் குறுந்தொடர்களாகும். இவை புரதக்கூற்று (அமைன்) பிணைப்புகளைக் (ஒரு அமினோ அமிலத்தின் கார்பாக்சில் தொகுதியானது, இன்னொரு அமினோ அமிலத்தின் அமினோ தொகுதியுடன் இணைந்த சகப்பிணைப்பு) கொண்டவையாகும். புரதங்களிலிருந்து, புரதக்கூறுகள் அளவின் அடிப்படையில் வேறுபடுத்தப்படுகின்றன. ஒற்றைப் புரதக்கூற்று பிணைப்பைக் கொண்ட இரு அமினோ அமிலங்களாலான இருபுரதக்கூறுகளே மீச்சிறு புரதக்கூறுகளாகும். இவற்றையடுத்து முப்புரதக்கூறுகள், நாற்புரதக்கூறுகள், பல்புரதக்கூறுகள் என உள்ளன. பல்புரதக்கூறானது, ஒரு நீளமான, கிளைத் தொடரிகளற்ற, புரதக்கூற்று தொடரியாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரதக்கூறு&oldid=1511340" இருந்து மீள்விக்கப்பட்டது