கிளைத்தொடரி அமினோ அமிலம்
கிளைத்தொடரி அமினோ அமிலம் (branched-chain amino acid; BCAA) என்பது கொழுப்பார்ந்த அமினோ அமிலத்தை கிளைத்தொடரியாகக் (ஒரு கார்பன் அணு, இரண்டிற்கும் மேற்பட்ட கார்பன் அணுக்களுடன் சேர்ந்தக் கிளைத்தொடரி) கொண்ட அமினோ அமிலமாகும். புரதமாக்கும் அமினோ அமிலங்களில் மூன்று கிளைத்தொடரி அமினோ அமிலங்கள் உள்ளன: லியூசின், ஐசோலியூசின், வாலின்[1].



கிளைத்தொடரி அமினோ அமிலங்கள், மனிதருக்குத் தேவையான ஒன்பது இன்றியமையா அமினோ அமிலங்களைச் சேர்ந்தவையாகும். தசைப் புரதங்களில் உள்ள இன்றியமையா அமினோ அமிலங்களில் முப்பது சதவிகிதமும், பாலூட்டிகளுக்குத் தேவையான முன்னுருவாக்கப்பட்ட அமினோ அமிலங்களில் நாற்பது சதவிகிதமும் கிளைத்தொடரி அமினோ அமிலங்கள் உள்ளன[2].
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Sowers, Strakie. "A Primer On Branched Chain Amino Acids". Huntington College of Health Sciences இம் மூலத்தில் இருந்து 28 ஆகஸ்ட் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170828235407/http://www.hchs.edu/literature/BCAA.pdf. பார்த்த நாள்: 22 March 2011.
- ↑ "Exercise Promotes BCAA Catabolism: Effects of BCAA Supplementation on Skeletal Muscle during Exercise". J. Nutr. 134 (6): 1583S-1587S. 2004. http://jn.nutrition.org/content/134/6/1583S.full. பார்த்த நாள்: 22 March 2011.