உள்ளடக்கத்துக்குச் செல்

லியூசின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லியூசின்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
லியூசின்
வேறு பெயர்கள்
2-அமினோ-4- மீதைல் பென்டநோயிக் அமிலம்
இனங்காட்டிகள்
61-90-5 Y
ChEMBL ChEMBL291962 Y
ChemSpider 5880 Y
InChI
  • InChI=1S/C6H13NO2/c1-4(2)3-5(7)6(8)9/h4-5H,3,7H2,1-2H3,(H,8,9)/t5-/m0/s1 Y
    Key: ROHFNLRQFUQHCH-YFKPBYRVSA-N Y
  • InChI=1/C6H13NO2/c1-4(2)3-5(7)6(8)9/h4-5H,3,7H2,1-2H3,(H,8,9)/t5-/m0/s1
    Key: ROHFNLRQFUQHCH-YFKPBYRVBU
யேமல் -3D படிமங்கள் Image
KEGG D00030 Y
பப்கெம் 6106
  • CC(C)C[C@@H](C(=O)O)N
UNII GMW67QNF9C Y
பண்புகள்
C6H13NO2
வாய்ப்பாட்டு எடை 131.18 g·mol−1
காடித்தன்மை எண் (pKa) 2.36 (கார்பாக்சில்), 9.60 (அமினோ)[1]
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.
Y verify (இது Y☒N ?)

லியூசின் (Leucine) [குறுக்கம்: Leu (அ) L][2] என்னும் அமினோ அமிலம் ஒரு கிளைத்தொடரி ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HO2CCH(NH2)CH2CH(CH3)2. இது ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் புரதங்களிலிருந்துப் பெறப்படுகிறது. இதன் குறிமுறையன்கள்: UUA, UUG, CUU, CUC, CUA மற்றும் CUG. ஹைட்ரோகார்பனை பக்கத் தொடராக கொண்டுள்ளதால், லியூசின் அமினோ அமிலமானது நீர்தவிர்க்கும் அமினோ அமிலமாகக் கருதப்படுகிறது.

உயிரியல் பண்புகள்

[தொகு]

லியூசின் கல்லீரல், கொழுப்புத் திசு மற்றும் தசைநார்த் திசுக்களில் உபயோகப்படுத்தப்படுகிறது. கொழுப்பு மற்றும் தசைநார்த் திசுக்களில் லியூசின் ஸ்ட்டீரால்களை உருவாக்கப் பயன்படுகிறது. மேலும், இவ்விரண்டு திசுக்களிலும் கல்லீரலைக் காட்டிலும் ஏழு மடங்கு அதிகமாக லியூசின் உபயோகப்படுத்தப்படுகின்றது.[3]

தசைத்திசுக்களில் புரத உற்பத்தியைத் தூண்டும் ஒரே ஒரு அமினோ அமிலம் லியூசின் மட்டுமே.[4] உப உணவுப் பொருளாக லியூசின் தசைப் புரத உற்பத்தியைத் தூண்டி முதுமையடைந்த எலிகளில் தசைநார்த் திசு சிதைவினைக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.[5]

நடுநிலை அமிலக்காரக் குறியீட்டில் (pH=7.0) இருமுனை அயனி வடிவம், (S)-லியூசின் (இடது) மற்றும் (R)-லியூசின் (வலது).

உணவு அம்சங்கள்

[தொகு]

L-லியூசின் (E641) உணவுச் சேர்ப்பில் மணங்கூட்டியாக வகைப்படுத்தப்படுகிறது.

லியூசினின் உணவு மூலங்கள் [6]
உணவு கி/100கி
சோயா அடர்புரதம்4.917
வேர்க்கடலை1.672
முளைவிட்ட கோதுமை1.571
பாதாம் பருப்பு1.488
புல்லரிசி (காடைக்கண்ணி)1.284
சமைத்த அவரை0.765
சமைத்த பருப்பு வகைகள்0.654
சமைத்த கொண்டைக் கடலை0.631
மக்காச்சோளம்0.348
சாதம்0.191

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dawson, R.M.C., et al., Data for Biochemical Research, Oxford, Clarendon Press, 1959.
  2. IUPAC-IUBMB Joint Commission on Biochemical Nomenclature. "Nomenclature and Symbolism for Amino Acids and Peptides". Recommendations on Organic & Biochemical Nomenclature, Symbols & Terminology etc. Retrieved 2007-05-17.
  3. J. Rosenthal, et al. Department of Medicine, University of Toronto, Toronto, Canada. "Metabolic fate of leucine: A significant sterol precursor in adipose tissue and muscle". American Journal of Physiology Vol. 226, No. 2, p. 411-418. Retrieved 2008-03-25.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  4. Etzel MR (2004). "Manufacture and use of dairy protein fractions". The Journal of Nutrition 134 (4): 996S–1002S. பப்மெட்:15051860. http://jn.nutrition.org/content/134/4/996S.long.
  5. L. Combaret, et al. Human Nutrition Research Centre of Clermont-Ferrand. "A leucine-supplemented diet restores the defective postprandial inhibition of proteasome-dependent proteolysis in aged rat skeletal muscle". Journal of Physiology Volume 569, issue 2, p. 489-499. Retrieved 2008-03-25.
  6. National Nutrient Database for Standard Reference. U.S. Department of Agriculture. Archived from the original on 2015-03-03. Retrieved 2009-09-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லியூசின்&oldid=4525020" இலிருந்து மீள்விக்கப்பட்டது