புல்லரிசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புல்லரிசி
ரை
Ear of rye.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: நிலைத்திணை
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒற்றை விதையிலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: கம்மெலினிட்சு (Commelinids)
வரிசை: போயேல்சு (Poales)
குடும்பம்: போயேசியே (Poaceae)
துணைக்குடும்பம்: போயாய்டியே (Pooideae)
சிற்றினம்: டிரிட்டிக்காசியே (Triticeae)
பேரினம்: செக்கேல்
இனம்: செ. சீரியேல்
இருசொற் பெயரீடு
செக்கேல் சீரியேல்
வேறு பெயர்கள்

செக்கேல் ஃபிரேகைல் (M.Bieb.)

புல்லரிசி என்பது ஒரு சிறுகூலம் ஆகும். கோதுமையைப்போலக் காணப்பட்டாலும் நீளமாகவும், சற்று மெல்லியதாகவும் கடினமாகவும் இருக்கும் இந்தச் சிறுதானியம் பல நிறங்களைக் கொண்டது. இது பச்சை,சிவப்பு, பழுப்பு,மஞ்சள்,சாம்பல் போன்ற நிறங்களில் காணப்படுகிறது. வாயில் போட்டு சுவைத்தால் கோதுமையின் சுவைதான் ஆனால் புல்லரிசியில் கெட்டியான மாவு கிடைக்கிறது. இப்பயிர் மண் வளம் இல்லாத, உலர்ந்த, அதிககுளிரான மிக உயரமான மலைப்பகுதிகளில் நன்கு வளர்கிறது. இச்சிறுகூலம் ஆண்டு முழுவதும் பயிரிடப்படுகிறது. இதில் மாப்பிசின் உள்ளதாயினும் கோதுமையில் கிடைக்கும் மாப்பிசினைவிட சிறந்தது அல்ல. இம்மாவில் செய்யப்படும் உரொட்டி கறுப்பாகவும் அடர்வாகவும் இருக்கும். இதைக் கறுப்பு உரொட்டி (Black bread) என்பர். இந்த உரொட்டி சுவையானது. செருமனி போன்ற ஐரோப்பிய நாடுகளில் முதன்மையான உணவாக உள்ளது. இங்கு புல்லரிசி)உரொட்டிக்குத் தேவை அதிகம். அதனால் இது மதிப்பு மிக்கதாகவும், விலை மிகுந்ததாக உள்ளது.

வரலாறு[தொகு]

புல்லரிசி கூலமணிகள்

இது நடுவண் துருக்கியிலும் கிழக்கு துருக்கியிலும் அயல்பகுதிகளிலும் தானாக வளரும் கோதுமைசார் இனங்களுள் ஒன்று. பயிரிட்டு வளர்க்கப்பட்ட இச்சிறுகூலம் சிறிய அளவில் ஆசியா மைனரில் (துருக்கியில்) கட்டல்கோயூக்கு அருகில் உள்ள மட்பாண்டங்களுக்கு முந்தைய புதிய கற்கால பி கான் அசன் III போன்ற புதிய கற்காலக் களங்களில் காணப்பட்டது.[1] இது தவிர, கிமு 1800 - 1500 காலப்பகுதியில் நடுவண் ஐரோப்பாவின் வெண்கலக் காலம் வரையில் தொல்லியல் களங்கள் எதிலும் இச்சிறுகூலம் காணப்படவில்லை.[2] இந்தக் கூலத்தின் தொல்லியல் சான்றுகள் பண்டைய உரோமிலும் இரைன், தான்யூபு ஆற்றுப் பகுதிகளிலும் அயர்லாந்திலும் பிரித்தானியாவிலும் கிடைத்தாலும்,[3] பிளினி முதுவல் இதை ஏற்காமல் இது மிக வலிவில்லாத உணவாகவும் பஞ்சத்தில் பசிதீர்க்க மட்டுமே உதவும் என்றும் எழுதுகிறார்[4] மேலும் இதன் கடுஞ்சுவையை ஈடுகட்ட இதனுடன் சுபெல்ட்டு கலக்கப்படுகிறது எனவும் அப்போதும் கூட இது வயிற்றைக் கலக்கிவிடுகிறது எனவும் எழுதுகிறார்.[5]

விளைச்சல், நுகர்வு சார்ந்த புள்ளியியல்[தொகு]

நாடுவாரியாக புல்லரிசி ஏற்றுமதி (2014) ஆர்வார்டு பொருளியல் வள விவரப்படம்
புல்லரிசி விளையும் பத்து முதன்மையான நாடுகள் – 2012
(metric ton)
 செருமனி 3 893 000
 போலந்து 2 888 137
 உருசியா 2 131 519
 பெலருஸ் 1 082 405
 சீனா 678 000
 உக்ரைன் 676 800
 டென்மார்க் 384 400
 துருக்கி 370 000
 கனடா 336 600
 எசுப்பானியா 296 700
உலகளாவிய மொத்தம் 14 615 719
தகவல்: ஐ நா உணவு, வேளாண்மை நிறுவனம் [6]
கனிமங்கள்
சுண்ணகம் 33 mg
இரும்பு 2.67 mg
மங்கனீசு 121 mg
பாசுவரம் 374 mg
பொட்டாசியம் 264 mg
சோடியம் 6 mg
துத்தநாகம் 3.73 mg
செம்பு 0.450 mg
மகனீசியம் 2.680 mg
திங்களம் 0.035 mg

புல்லரிசி கிழக்கு ஐரோப்பாவிலும் நடுவண் ஐரோப்பாவிலும் வடக்கு ஐரோப்பாவிலும் பயிரிடப்படுகிறது. முதன்மையான புல்லரிசி பயிரீட்டுப் பகுதி வடக்கு செருமனியில் தொடங்கி, போலந்து, உக்கிரைன், பேலேருசு, லிதுவேனியா, லாவ்ழ்சியா ஊடாக, நடுவண் உருசியா, வடக்கு உருசியா வரை பரவியுள்ளது. இது ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும் தென் அமெரிக்காவில் அர்செண்டீனா, பிரேசில், சிலி ஆகிய பகுதிகளிலும் ஆத்திரேலியாவில் ஓசியானாவிலும் நியூசிலாந்திலும் துருக்கியிலும் கசக்சுத்தானிலும் வடக்கு சீனாவிலும் பயிரிடப்படுகிறது.

புல்லரிசி விளைச்சல் முதன்மையாகப் பயிரிடும் பெரும்பாலான நாடுகளில் 2012 அளவில்பெரிதும் குறைந்துவிட்டது; எடுத்துகாட்டாக, உருசிய புல்லரிசி விளைச்சல் 1992 இல் இருந்த 13.9 மில்லியன் டன் 2012 இல் 2.1மில்லியன் டன்னாக குறைந்துள்ளது. இதேபோல, போலந்தில் 1992 இல் இருந்த 5.9 மில்லியன் டன் 2005 இல் 2.9 மில்லியன் டன்னாக குறைந்துவிட்டது; செருமனியில் 3.3 மில்லியன் டன்னாக இருந்து 3.9 மில்லியன் டன்னாகக் குறைந்துவிட்டது; பேலேருசுவில் 3.1 மில்லியன் டன்னாக இருந்து 1.1 மில்லியன் டன்னாகக் குறைந்துவிட்டது; சீனாவில் 1.7 மில்லியன் டன்னாக இருந்து 0.7 மில்லியன் டன்னாகக் குறைந்துவிட்டது.[6] புல்லரிசி விளைச்சலின் பேரளவு உள்நாட்டிலேயோ அருகில் அமைந்த நாடுகளிலோ நுகரப்படுகிறது; உலகச் சந்தைக்கு அவ்வளவாகச் செல்வதில்லை.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

  1. Hillman, Gordon (1978). "On the Origins of Domestic rye: Secale Cereale: The Finds from Aceramic Can Hasan III in Turkey". Anatolian Studies 28: 157–174. doi:10.2307/3642748. (subscription required)
  2. Zohary, Daniel; Hopf, Maria; Weiss, Ehud (2012). Domestication of Plants in the Old World: The Origin and Spread of Domesticated Plants in Southwest Asia, Europe, and the Mediterranean Basin. Oxford: Oxford University Press. p. 62. ISBN 978-0-19-954906-1. https://books.google.com/books?id=1hHSYoqY-AwC&pg=PA62. 
  3. Gyulai, Ferenc (2014). "Archaeobotanical overview of rye (Secale Cereale L.) in the Carpathian-basin I. from the beginning until the Roman age". Journal of Agricultural and Environmental Science 1 (2): 25–35. http://docplayer.net/3685335-Archaeobotanical-overview-of-rye-secale-cereale-l-in-the-carpathian-basin-i-from-the-beginning-until-the-roman-age.html. பார்த்த நாள்: July 14, 2016.  page 26.
  4. Evans, L. T.; Peacock, W. J. (March 19, 1981). Wheat Science: Today and Tomorrow. Cambridge University Press. p. 11. ISBN 978-0-521-23793-2. https://books.google.com/books?id=HEQ9AAAAIAAJ&pg=PA11. 
  5. Pliny the Elder (1855). The Natural History. London: Taylor and Francis. Book 18, Ch. 40. http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Perseus%3Atext%3A1999.02.0137%3Abook%3D18%3Achapter%3D40. பார்த்த நாள்: July 12, 2016. 
  6. 6.0 6.1 "Major Food and Agricultural Commodities and Producers: Countries by Commodity". FAO.org. Food and Agriculture Organization of the United Nations (2005).

மேலும் படிக்க[தொகு]

  • Schlegel, Rolf (2006). "Rye (Secale cereale L.): A Younger Crop Plant with Bright Future". in Sing, R. J.; Jauhar, P.. Genetic Resources, Chromosome Engineering, and Crop Improvement. Vol. II – Cereals. Boca Raton, Florida: CRC Press. பக். 365–394. ISBN 0-8493-1430-5.  Schlegel provides a 2011 updated version online.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புல்லரிசி&oldid=2430666" இருந்து மீள்விக்கப்பட்டது