ஓப்கின்சு-கோல் வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓப்கின்சு-கோல் வினை (Hopkins-Cole reaction) புரதங்களில் டிரிப்டோபான் இருப்பதைக் கண்டறிய உதவும் ஒரு சோதனையாகும். கிளையாக்சிலிக் அமில வினை என்ற பெயராலும் இச்சோதனை அழைக்கப்படுகிறது[1]. புரதக் கரைசலுடன் கிளையாக்சிலிக் அமிலம் உள்ள ஓப்கின்சு-கோல் வினைப்பொருள் சேர்க்கப்படுகிறது. அடர் கந்தக அமிலத்தை மெதுவாக இக்கரைசலில் சேர்த்தால் இரண்டு அடுக்குகள் உருவாகின்றன. புரதத்தில் டிரிப்டோபான் இருந்தால் இரண்டு அடுக்குகளுக்குமிடையில் கருஞ்சிவப்பு நிற வளையம் உருவாகும்[2][3]. நைட்ரைட்டுகள், குளோரேட்டுகள், நைட்ரேட்டுகள், குளோரைடுகள் உருவாக்கத்தில் இருந்து வினை பாதுகாக்கப்படுகிறது[4]

மேற்கோள்கள்[தொகு]

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓப்கின்சு-கோல்_வினை&oldid=2181194" இலிருந்து மீள்விக்கப்பட்டது