கூச் பெகர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூச் பிகார் மாவட்டம்
কোচবিহার জেলা
Cooch Behar in West Bengal (India).svg
கூச் பிகார்மாவட்டத்தின் இடஅமைவு மேற்கு வங்காளம்
மாநிலம்[[மேற்கு வங்காளம்]], இந்தியா
தலைமையகம்கூச் பெகர்
பரப்பு3,387 km2 (1,308 sq mi)
மக்கட்தொகை2,822,780 (2011)
மக்கள்தொகை அடர்த்தி833/km2 (2,160/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை225,618
படிப்பறிவு75.49 per cent
பாலின விகிதம்942
மக்களவைத்தொகுதிகள்கூச் பிகார் நாடாளுமன்ற தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை1 மாதாபங்கா, 2 வடக்கு கூச் பெகர், 3 தெற்கு கூச் பெகர், 4 சீதால்குச்சி, 5 சீதை, 6 தினாட்டா, 7 நடபாரி, 8 டுஃபான்கஞ்ச்.
முதன்மை நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலை எண் 31
சராசரி ஆண்டு மழைபொழிவு3201 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

கூச் பெகர் மாவட்டம் (Cooch Behar district) (Pron: ˈku:ʧ bihɑ:) (வங்காள: কোচবিহার জেলা, Rajbongshi/Kamatapuri : কোচবিহার) இந்தியா, மேற்கு வங்காள மாநிலத்தில் அமைந்த 23 மாவட்டங்களில் ஒன்றாகும். பிரித்தானியா இந்தியா அரசு காலத்தில் கூச் பெகர், ஒரு மன்னராட்சிப் பகுதியாக இருந்தது. குறைந்த மக்கட்தொகை கொண்ட மேற்கு வங்கத்தின் 19 மாவட்டங்களில், கூச் பெகர் மாவட்டம் மூன்றாம் இடத்தில் உள்ளது. இமயமலையின் தராய் பகுதியில் அமைந்த மாவட்டம். ஒரு நாடாளுமன்ற தொகுதியும், எட்டு சட்டமன்ற தொகுதிகளையும் கொண்டது இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கூச் பெகர் நகரம் ஆகும். [1]

வரலாறு[தொகு]

28 ஆகஸ்டு 1949ஆம் ஆண்டிற்கு முன்னர், கூச் பெகர் பகுதி, பிரித்தானிய இந்திய அரசின் கீழ் ஒரு மன்னராட்சி நாடாக விளங்கியது. சர்தார் வல்லபாய் படேலின் முயற்சியால் 12 செப்டம்பர் 1949 அன்று இந்திய ஒன்றியத்துடன் இணைந்து, பின் 19 சனவரி 1950ஆம் ஆண்டில் மேற்கு வங்காள மாநிலத்தின் ஒரு மாவட்டமாக மாறியது.

ஆறுகள்[தொகு]

தீஸ்தா ஆறு, ஜல்தாகா ஆறு, டொர்ஷா ஆறு, கல்ஜானி, ராய்டக் ஆறு, கதாதர் ஆறு மற்றும் கர்காரியா ஆறு என ஏழு ஆறுகள், கூச் பிகார் மாவட்டத்தின் வடமேற்கிலிருந்து, தென்கிழக்கே பாய்கிறது.

வேளாண்மை[தொகு]

2530.63 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், நெல், புகையிலை, சணல், தென்னை, கடுகு, உருளைக்கிழங்கு பயிரிடப்படுகிறது.

வருவாய்க் கோட்டங்கள்[தொகு]

உட்கோட்டங்கள்[தொகு]

கூச் பிகார் மாவட்டம் நான்கு உட்கோட்டங்கள் கொண்டது;

  1. கூச் பெகர் க சதர் உட் கோட்டம்
  2. தினாட்டா உட் கோட்டாம்
  3. மாதாபங்கா உட் கோட்டம்
  4. டூபான் கஞ்ச் உட் கோட்டம்

பார்க்க வேண்டிய இடங்கள்[தொகு]

  1. கூச் பெகர் அரண்மனை
  2. மதன் மோகன் கோயில்
  3. ராஜ்பாத் நினைவிடம்
  4. பனேஸ்வர் சிவன் கோயில்
  5. மதுப்பூர் அணைக்கட்டு
  6. காமதேஸ்வரி கோயில்
  7. சாகர் திகி நீர்த் தேக்கம்
  8. ரசிக்பீல் பறவைகள் சரணாலயம்
  9. ரசோமதி இயற்கை வன சுற்றுலா வளாகம்
  10. ஜல்தாப்ரா தேசியப் பூங்கா

[2]

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, கூச் பிகார் மாவட்ட மக்கள் தொகை 2,822,780 ஆகும்.[1] மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 833 நபர்கள். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 942 பெண்கள். எழுத்தறிவு விகிதம் 75.49%.

கல்வி[தொகு]

  1. கூச் பிகார் பஞ்சனன் பார்மா பல்கலைக் கழகம் - 1
  2. வடக்கு வங்காள வேளாண்மைப் பல்கலைக் கழகம், கூச் பிகார் - 1
  3. துவக்கப்பள்ளிகள் – 1805
  4. உயர்நிலைப் பள்ளிகள் – 120
  5. மேல்நிலைப் பள்ளிகள் – 61
  6. கேந்திரிய வித்தியாலயம் – 1
  7. ஜவஹர் நவோதய வித்தியாலயம் – 1
  8. பொறியியல் & தொழில் நுட்ப கல்லூரிகள் – 2
  9. தொழில் & தொழில் நுட்ப பள்ளிகள் – 16
  10. கலை & அறிவியல் கல்லூரிகள் – 9
  11. பார்வை அற்றோர் பள்ளி – 1
  12. நூலகங்கள் – 110

மேலும் பல தனியார் உயர்நிலைப் பள்ளிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளும் உள்ளன.

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "District Census 2011". Census2011.co.in. 2011. 2011-09-30 அன்று பார்க்கப்பட்டது.
  2. Indian Ministry of Forests and Environment. "Protected areas: Sikkim". 23 ஆகஸ்ட் 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25 September 2011 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  • Moore, Lucy (2004) Maharanis: The Extraordinary Tale Of Four Indian Queens And Their Journey From Purdah To Parliament, Penguin, ISBN 0-670-03368-5

வெளி இணப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூச்_பெகர்_மாவட்டம்&oldid=3551005" இருந்து மீள்விக்கப்பட்டது