பன்னா தேசியப் பூங்கா
பன்னா தேசியப் பூங்கா | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
அமைவிடம் | மத்தியப்பிரதேசம், இந்தியா |
கிட்டிய நகரம் | பன்னா, கஜுராஹோ (25 km (16 mi)) |
ஆள்கூறுகள் | 24°43′49.60″N 80°0′36.80″E / 24.7304444°N 80.0102222°Eஆள்கூறுகள்: 24°43′49.60″N 80°0′36.80″E / 24.7304444°N 80.0102222°E |
பரப்பளவு | 542.67 |
நிறுவப்பட்டது | 1981 |
வருகையாளர்கள் | 22,563 (in 2009) |
நிருவாக அமைப்பு | இந்திய அரசு, சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம், புலிகள் பாதுகாப்புத் திட்டம் |
பன்னா தேசிய பூங்கா இந்தியாவில் மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் பன்னா மாவட்டம் மற்றும் சத்தர்பூர் மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு தேசிய பூங்கா ஆகும். இதன் பரப்பளவு 542.67 km2 (209.53 sq mi) ஆகும். இது 1994 ஆம் ஆண்டில் இந்தியாவின் இருபத்திரண்டாவது புலிகள் சரணாலயமாகவும். மத்தியப் பிரதேசத்தின் ஐந்தாவது சரணாலயமாகவும் அறிவிக்கப்பட்டது.[1] இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தினால், பன்னா தேசியப் பூங்காவிற்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வந்ததாக 2007 ல் சிறப்பு விருது வழங்கப்பட்டது. 2009ல், மொத்தப் புலிகளின் எண்ணிக்கையும் வனத்துறை அதிகாரிகள் உதவியுடன் வேட்டை மூலம் அகற்றப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.[2]
சான்றுகள்[தொகு]
- ↑ "பன்னா தேசியப் பூங்கா". செப்டம்பர் 5, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "பன்னா தேசியப் பூங்கா புலிகள் அழிப்பு". செப்டம்பர் 5, 2015 அன்று பார்க்கப்பட்டது.