பீதாம்பூர்

ஆள்கூறுகள்: 22°37′11″N 75°41′36″E / 22.61972°N 75.69333°E / 22.61972; 75.69333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீதாம்பூர்
நகரம்
அடைபெயர்(கள்): இந்தியாவின் டெட்ராய்ட் [1]
பீதாம்பூர் is located in மத்தியப் பிரதேசம்
பீதாம்பூர்
பீதாம்பூர்
இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் பீதாம்பூர் நகரத்தின் அமைவிடம்
பீதாம்பூர் is located in இந்தியா
பீதாம்பூர்
பீதாம்பூர்
பீதாம்பூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 22°37′11″N 75°41′36″E / 22.61972°N 75.69333°E / 22.61972; 75.69333
நாடு இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்தார்
அரசு
 • நிர்வாகம்பெருநகர இந்தூர் பிரதேசம்
பரப்பளவு
 • மொத்தம்200 km2 (80 sq mi)
பரப்பளவு தரவரிசை25
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,26,099
 • தரவரிசை25
 • அடர்த்தி630/km2 (1,600/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்454775
தொலைபேசி குறியீடு எண்https://www.allcodesindia.in/stdcode/mp/pithampur.php 0729252
வாகனப் பதிவுMP11

பீதாம்பூர், மத்திய இந்தியாவில் அமைந்த மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் தென்கிழக்கில் உள்ள தார் மாவட்டத்தில் அமைந்த நகராட்சி ஆகும். தார் மாவட்டத் தலைமையிடமான தார் நகரத்திற்கு கிழக்கே 42 கிலோ மீட்டர் தொலைவில் பீதாம்பூர் நகரம் உள்ளது. பீதாம்பூர் நகரம் இந்தூர் பெருநகர மாநகராட்சியின் வலாயத்தில் உள்ளது. இங்கு கார் உற்பத்தி தொழிற்சாலைகள் அதிகம் இருப்ப்பதால் இந்நகரத்தை இந்தியாவின் டெட்ராய்ட் என அழைப்பர். மேலும் பீதாம்பூர் நகரம் அதிக தொழிற்சாலைகள் கொண்டது. இந்தூர் நகரத்திற்கு தென்மேற்கில் 32 கிலோ மீட்டர் தொலைவில் பீதாம்பூர் நகரம் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 31 வார்டுகளும், 31,136 வீடுகளும் கொண்ட பீதாம்பூர் நகரத்தின் மக்கள் தொகை 1,26,200 ஆகும். அதில் ஆண்கள் 70,250 மற்றும் பெண்கள் 55,950 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 796 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 20933 (16.59 %) ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 80.92% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 91.07%, இசுலாமியர் 8.16%, கிறித்தவர்கள் 0.40% மற்றும் பிறர் 0.35% ஆகவுள்ளனர்.[2]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kumud Das. "Poor infra forcing firms to desert 'Detroit of India'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 10 October 2015.
  2. Pithampur Population Census 2011

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீதாம்பூர்&oldid=3742504" இலிருந்து மீள்விக்கப்பட்டது