உள்ளடக்கத்துக்குச் செல்

நாக்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாக்டா (Nagda), இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்த உஜ்ஜைன் மாவட்டத்தின் உஜ்ஜைன் வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இது உஜ்ஜைன் நகரத்திற்கு வடமேற்கே 58 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மால்வா பிரதேசத்தில் பாயும் சம்பல் ஆற்றின் கரையில் அமைந்த நாக்டா ஒரு தொழில் நகரம் ஆகும். இந்நகரத்தில் விஸ்கோஸ் நூல், அனல் மின் நிலையம் மற்றும் வேதியியல் தொழிற்சாலைகள் நிறைந்துள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 36 வார்டுகளும், 20,177 வீடுகளும் கொண்ட நாக்டா நகரத்தின் மக்கள் தொகை 1,00,039 ஆகும். அதில் ஆண்கள் 51,373 மற்றும் பெண்கள் 48,666 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 947 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11,487 (11%) ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 80.7% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 20,020 மற்றும் 1,562 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 81.68%, இசுலாமியர் 14.58%, சீக்கியர்கள் 0.53%, கிறித்தவர்கள் 0.81% மற்றும் பிறர் 0.40% ஆகவுள்ளனர்.[1]

போக்குவரத்து

[தொகு]
நாக்டா இரயில் நிலையம்

நாக்டா இரயில் நிலையம்[2] உஜ்ஜைன், போபால், தில்லி, மும்பை, போபால், நாக்பூர், லக்னோ, ஜெய்ப்பூர் போன்ற வட இந்திய நகரங்களுடன் இணைக்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=நாக்டா&oldid=3521625" இலிருந்து மீள்விக்கப்பட்டது