உள்ளடக்கத்துக்குச் செல்

ரத்லாம் மாவட்டம்

ஆள்கூறுகள்: 23°19′48″N 75°02′24″E / 23.33000°N 75.04000°E / 23.33000; 75.04000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரத்லாம் மாவட்டம்
रतलाम जिला
ரத்லாம்மாவட்டத்தின் இடஅமைவு மத்தியப் பிரதேசம்
மாநிலம்[[மத்தியப் பிரதேசம்]], இந்தியா
நிர்வாக பிரிவுகள்உஜ்ஜைன் கோட்டம்
தலைமையகம்[[ரத்லம்]]
பரப்பு4,861 km2 (1,877 sq mi)
மக்கட்தொகை1455069 (2011)
மக்கள்தொகை அடர்த்தி299/km2 (770/sq mi)
படிப்பறிவு66.78%
பாலின விகிதம்971
மக்களவைத்தொகுதிகள்ரத்லாம் நாடாளுமன்றத் தொகுதி
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

ரத்லாம் மாவட்டம் (Ratlam District) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் 52 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நகரம் ரத்லம் ஆகும். இது உஜ்ஜைன் கோட்டத்தில் அமைந்துள்ளது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது இம்மாவட்டத்தின் பகுதிகளை ரத்லம் சமஸ்தானம், சைலானா சமஸ்தானம் மற்றும் ஜாவ்ரா சமஸ்தானங்கள் ஆண்டது.

மாவட்ட எல்லைகள்

[தொகு]

ரத்லாம் மாவட்டத்தின் வடக்கே மண்டசௌர் மாவட்டம், வடகிழக்கில் ஜாலாவார் மாவட்டம், (இராஜஸ்தான்), கிழக்கில் உஜ்ஜைன் மாவட்டம், தென்கிழக்கில் தார் மாவட்டம், தெற்கில் ஜாபூவா மாவட்டம், மேற்கில் பன்ஸ்வாரா மாவட்டம் (இராஜஸ்தான்), வடமேற்கில் பிரதாப்கர் மாவட்டம், (இராஜஸ்தான்) எல்லைகளாக அமைந்துள்ளது.

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

உஜ்ஜைனி கோட்டத்தில் அமைந்த இம்மாவட்டம் ஐந்து வருவாய் வட்டங்களையும், ஒன்பது நகரங்களையும், 1063 கிராமங்களையும் கொண்டுள்ளது.[1]

மக்கள் தொகையியல்

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,455,069 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 70.10% மக்களும்; நகரப்புறங்களில் 29.90% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 19.72% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 738,241 ஆண்களும் மற்றும் 716,828 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 971 பெண்கள் வீதம் உள்ளனர். 4,861 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 299 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 66.78% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 77.54% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 55.77% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 218,354 ஆக உள்ளது. [2]

சமயம்

[தொகு]

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,267,043 (87.08 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 151,071 (10.38 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 3,996 (0.27 %) ஆகவும், , சீக்கிய சமய மக்கள் தொகை 1,353 (0.09 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 29,353 (2.02 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 175 (0.01 %) ஆகவும், பிற சமய மக்களின் தொகை 123 (0.01 %) ஆகவும், மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 1,955 (0.13 %) ஆகவும் உள்ளது.

மொழிகள்

[தொகு]

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ratlam". Ratlam district administration. பார்க்கப்பட்ட நாள் 2010-08-12.
  2. Ratlam District : Census 2011 data


"https://ta.wikipedia.org/w/index.php?title=ரத்லாம்_மாவட்டம்&oldid=3890787" இலிருந்து மீள்விக்கப்பட்டது