சாஜாபூர் மாவட்டம்
சாஜாபூர் மாவட்டம் शाजापुर जिला | |
---|---|
சாஜாபூர்மாவட்டத்தின் இடஅமைவு மத்திய பிரதேசம் | |
மாநிலம் | மத்திய பிரதேசம், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | உஜ்ஜைன் கோட்டம் |
தலைமையகம் | சாஜாபூர் |
பரப்பு | 6,195 km2 (2,392 sq mi) |
மக்கட்தொகை | 1,512,681 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 244/km2 (630/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 19.41% |
படிப்பறிவு | 69.09 |
பாலின விகிதம் | 938 |
மக்களவைத்தொகுதிகள் | தேவாஸ் மக்களவை தொகுதி |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
சாஜாபூர் மாவட்டம் (Shajapur District) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் 52 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சாஜாபூர் நகரம் ஆகும். இம்மாவட்டம் உஜ்ஜைன் கோட்டத்தில் அமைந்துள்ளது.
மாவட்ட எல்லைகள்
[தொகு]குவாலியர் மாவட்டத்தின் வடகிழக்கில் ராய்கர் மாவட்டம், தென்கிழக்கில் சியோப்பூர் மாவட்டம், தெற்கில் தேவாஸ் மாவட்டம், தென்மேற்கில் உஜ்ஜைன் மாவட்டம், மேற்கில் ரத்லாம் மாவட்டம், வடமேற்கில் இராஜஸ்தான் மாநிலத்தின் ஜலவார் மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]சாஜாபூர் மாவட்டம் சாஜாபூர், சூஜால்பூர், மேமன் படோடியா மற்றும் கலப்பிபல் என நான்கு வருவாய் வட்டங்களை கொண்டுள்ளது.
மக்கள் தொகையியல்
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,512,681 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 80.59% மக்களும்; நகரப்புறங்களில் 19.41% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 17.20% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 780,520 ஆண்களும் மற்றும் 732,161 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 938 வீதம் உள்ளனர். 6,195 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 244 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 69.09 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 81.47 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 55.93 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 217,759 ஆக உள்ளது.[1]
சமயம்
[தொகு]இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,321,003 (87.33 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 174,724 (11.55 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 815 (0.05 %) ஆகவும், , சீக்கிய சமய மக்கள் தொகை 631 (0.04 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 13,755 (0.91 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 179 (0.01 ) ஆகவும், பிற சமய மக்களின் தொகை 66 (0.00 %) ஆகவும், மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 1,508 (0.10 %) ஆகவும் உள்ளது.
மொழிகள்
[தொகு]மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]