முரைனா
முரைனா | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): மயூர்வான் | |
ஆள்கூறுகள்: 26°30′N 78°00′E / 26.5°N 78.0°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம் | முரைனா |
அரசு | |
• மக்களவை உறுப்பினர் | நரேந்திர சிங் தோமர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 80 km2 (30 sq mi) |
ஏற்றம் | 177 m (581 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 2,00,482 |
• தரவரிசை | 154 |
• அடர்த்தி | 2,500/km2 (6,500/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி |
• வட்டார மொழிகள் | பிராஜ் பாஷா |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 476001 |
தொலைபேசி குறியீடு | 07532 |
வாகனப் பதிவு | MP-06 |
இணையதளம் | www |
முரைனா (Morena), மத்திய இந்தியாவில் அமைந்த மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் வடக்கில் உள்ள முரைனா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் மாநகராட்சி ஆகும். இது குவாலியர் நகரத்திற்கு வடமேற்கே 41 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 177 மீட்டர் (580 அடி) உயரத்தில் உள்ளது. இந்நகரத்தில் பூதேஷ்வர் இந்துக் கோயில்கள் மற்றும் சௌசாத் (64) யோகினி கோயில் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி வார்டுகளும், வீடுகளும் கொண்ட நகரத்தின் மக்கள் தொகை 2,00,482 ஆகும். அதில் ஆண்கள் 1,08,390 மற்றும் பெண்கள் 92,092 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 850 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 27,020 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 79.22% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 89.95%, இசுலாமியர் 8.44%, சமணர்கள் 1.27% மற்றும் பிறர் 0.33% ஆகவுள்ளனர்.[2]
போக்குவரத்து
[தொகு]சாலைகள்
[தொகு]மும்பை-ஆக்ராவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 3 முரைனா நகரத்தின் வழியாகச் செல்கிறது.
முரைனா இரயில் நிலையம்[3] போபால், தில்லி போன்ற நகரங்களுடன் இணைக்கிறது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Census of India Search details". censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 10 May 2015.
- ↑ Morena City Population 2011
- ↑ Morena railway station