தேசிய சம்பல் சரணாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேசிய சம்பல் சரணாலய்
தேசிய சம்பல் சொம்புமூக்கு முதலை காட்டுயிரிச் சரணாலயம்
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி)
Chambal river near Dhaulpur, India.jpg
தௌல்பூர் அருகே சம்பல் ஆற்று தேசிய சரணாலயம்]]
அமைவிடம்மத்தியப் பிரதேசம், இந்தியா
கிட்டிய நகரம்மோரினா 30 km (19 mi), ஆக்ரா 70 km (43 mi)
ஆள்கூறுகள்26°46′06″N 78°38′40″E / 26.7681981°N 78.6445791°E / 26.7681981; 78.6445791ஆள்கூறுகள்: 26°46′06″N 78°38′40″E / 26.7681981°N 78.6445791°E / 26.7681981; 78.6445791
நிறுவப்பட்டது1979
நிருவாக அமைப்புமத்தியப் பிரதேச வனத்துறை[1] இராஜஸ்தான் வனத்துறை[2] உத்திரப்பிரதேச வனத்துறை[3]

தேசிய சம்பல் சரணாலயம் அல்லது தேசிய சம்பல் கரியல் வனவிலங்கு சரணாலயம் என்று அழைக்கப்படும் இச்சரணாலயம் இது 5,400 km2 (2,100 sq mi) மிக அருகிய இனமான கரியல் எனப்படும் சொம்பு மூக்கு முதலை, சிவப்பு கிரீடம் கொண்ட கூரை ஆமை மற்றும் அருகிய இனமான தென்னாசிய ஆற்று ஓங்கில் ஆகியவற்றின் பாதுகாப்பிற்காக வட இந்தியாவில் முத்தரப்பு பாதுகாப்பிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள சரணாலயம் ஆகும் இது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களின் பகுதியில் அமைந்த சம்பல் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இங்கு சம்பல் ஆறு பாய்கிறது. இச்சரணாலயம் 1978 ஆம் ஆண்டில் மத்திய பிரதேசத்தில் முதன்முதலில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது, இப்போது மூன்று மாநிலங்களால் இணைந்து நிர்வகிக்கப்படும் ஒரு நீண்ட குறுகிய சூழலியல் காப்பகமாக உள்ளது. அழகிய சம்பல் நதி பல மணல் பள்ளத்தாக்குகள் மற்றும் மலைகளைக் கொண்டதாக உள்ளது.

வரலாறு[தொகு]

தேசிய சம்பல் சரணாலயத்தை நிறுவுவதற்கு இந்திய அரசின் நிர்வாக ஒப்புதல் செப்டம்பர் 30, 1978 தேதியிட்ட உத்தரவு எண் 17-74 / 77-FRY (WL) இல் தெரிவிக்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 18 (1) இன் கீழ் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சரணாலயம் மூன்று மாநிலங்களின் நிர்வாக எல்லைக்குள் வருவதால் , மூன்று மாநிலத்திற்கும் தேசிய சம்பல் சரணாலயத்தை உள்ளடக்கிய மூன்று தனித்தனி அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. 20 டிசம்பர் 1978 -தேதியிட்ட மத்திய பிரதேச அரசு அறிவிப்பு எண் F.15 / 5/77 -10 (2) அரசிதழில் வெளியீடு செய்யப்பட்ட மத்திய பிரதேச பகுதி ஆகும். ஜனவரி 1979 தேதியிட்ட உத்தரபிரதேச அரசு அறிவிப்பு எண் 7835 / XIV-3-103-78, 29 உத்தரப்பிரதேச பகுதி ஆகும். மேலும் 7 டிசம்பர் 1979 தேதியிட்ட ராஜஸ்தான் அரசாங்கத்தின் அரதிழில் வெளியீடு செய்யப்பட்ட No.F.11 (12) Rev.8 / 78 படி ராஜஸ்தான் பகுதி .[4]

இந்த சரணாலயம் 1972 ஆம் ஆண்டு இந்தியாவின் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகிறது. இந்த சரணாலயம் மத்திய பிரதேசத்தின் மோரினாவில் தலைமையகத்துடன் திட்ட அலுவலரின் கீழ் வனத்துறையால் நிர்வகிக்கப்படுகிறது.

விலங்குகள்[தொகு]

சம்பல் ஆற்றில் சொம்பு மூக்கு முதலை
சரணாலயத்தில் செம்முடிக் கூரை ஆமை
கங்கையாற்று ஓங்கில்
சம்பல் ஆற்றில் ஒரு இந்திய நீர் சறுக்குப் பறவை

மிக அருகி வரும் இனமான சொம்புமூக்கு முதலை மற்றும் செம்முடிக் கூரை ஆமை ஆகியவை இங்கு வாழ்கின்றன, மேலும் ஆபத்தான கங்கையாற்று ஓங்கில் ஆகியவை இந்த சம்பல் தேசியச் சரணாலயத்தின் முக்கிய இனங்களாக உள்ளன. மேலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள பெரிய இனங்களில் முகர் எனபடும் சதுப்புநில முதலை, மென்மையான ஆற்று நீர்நாய், வரிப்பட்டைக் கழுதைப்புலி , இந்திய ஓநாய் மற்ரும் இந்தியாவில் காணப்படும் 26 அரிய ஆமை இனங்களில் எட்டு சம்பல் சரணாலயத்தில் பாதுகாக்கப்படுகிறது. இதில் இந்திய குறுகிய தலையுடைய மென் நத்தையாமை , மூன்று கோடிட்ட கூரை ஆமை மற்றும் முடிசூட்டப்பட்ட நதி ஆமை ஆகியவை அடங்கும் . இங்கு வாழும் பிற ஊர்வன: இந்திய நத்தை ஆமை, மென் நத்தை ஆமை, இந்திய கூரை ஆமை, இந்திய கூடார ஆமை மற்றும் உடும்பு ஆகியவை.[5]

குறைந்து வரும் பாலூட்டிகளில் செம்முகக்குரங்கு , ஹனுமான் லங்கூர், தங்க குள்ளநரி, வங்காள நரி, ஆசிய மரநாய், சிறிய ஆசிய கீரி, இந்திய சாம்பல் கீரி, காட்டுப்பூனை, காட்டுப்பன்றி, சாம்பார் எனப்படும் கடமான், நீலான், புல்வாய், இந்தியச் சிறுமான், வடக்கு பனை அணில், இந்திய முகடு முள்ளம்பன்றி, இந்தியக் குழிமுயல், இந்திய தவசிப்பட்சி மற்றும் இந்திய நீள்காது முள்ளெலி ஆகியனவும் அடங்கும்:.[5]

தேசிய சம்பல் சரணாலயம் ஒரு முக்கியமான பறவைப் பாதுகாப்புப் பகுதியாக (ஐபிஏ) IN122 ஆல் பட்டியலிடப்பட்டுள்ளது.[6] மற்றும் இது ஒரு முன்மொழியப்பட்ட ராம்சார் தளமாகும் . இந்த சரணாலயத்தில் குறைந்தது 320 வகையான உயிரினங்களும் மற்றும் புலம்பெயர்ந்த பறவைகளும் வாழ்கின்றன. சைபீரியாவிலிருந்து குடியேறிய பறவைகள் இந்தச் சரணாலயத்தின் வளமான பறப்பு விலங்கினங்களின் ஒரு பகுதியாகும். இங்குள்ள அழிவாய்ப்பு இனமான பறவை இனங்களில் இந்திய ஸ்கிம்மர்,[7] சாரசு கொக்கு, அதீனா மீன் கழுகு மற்றும் இந்திய கல்குருவி ஆகியவையும் அடங்கும் . பாலிட் ஹாரியர் மற்றும் தடும்ப நாரை ஆகியவை அச்சுறு நிலையை அண்மித்த இனமாக உள்ளன. குளிர்கால பார்வையாளர்களில் கருப்பு வயிற்று ஆலா, சிவப்பு-க்ரெஸ்டட் போச்சார்ட், ஃபெருஜினஸ் போச்சார்ட் மற்றும் பட்டைத் தலை வாத்து ஆகியவை அடங்கும். மற்ற இனங்கள் முசல் கின்னாத்தி, பெரும் பூநாரை, பாம்புத் தாரா மற்றும் வேட்டைக்கார ஆந்தை ஆகியவை அடங்கும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chambal Sanctuary". மத்தியப் பிரதேச வனத்துறை. 2011-07-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-12-28 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "National Chambal". இராஜஸ்தான் வனத்துறை. 21 ஜூலை 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 December 2010 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. 3.0 3.1 "National Chambal Sanctuary". உத்திரப்பிரதேச வனத்துறை காட்டுயிரிகள் சரகம். 2010-12-28 அன்று பார்க்கப்பட்டது.
  4. Sale J.B. 1982. 2nd Draft. Management Plan For The National Chambal Sanctuary. First Five Year Period 1982/83 - 1986/87. Central Crocodile Breeding and Management Institute, Hyderabad.
  5. 5.0 5.1 "Reptiles & Mammals, Checklist of National Chambal Sanctuary". Wildlife wing of the Uttar Pradesh Forest Department. 2010-12-28 அன்று பார்க்கப்பட்டது.
  6. "IN122 National Chambal Wildlife Sanctuary (Agra/Etawah)". Sites - Important Bird Areas (IBAs). பன்னாட்டு பறவை வாழ்க்கை. 2012-10-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-12-29 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  7. "National Chambal Sanctuary". Birds of India. Kolkata Birds. 2011-06-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-12-29 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)