சதுப்புநில முதலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சதுப்புநில முதலை
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: ஊர்வன
வரிசை: Crocodilia
குடும்பம்: முதலை
துணைக்குடும்பம்: Crocodylinae
பேரினம்: Crocodylus
இனம்: C. palustris
இருசொற் பெயரீடு
Crocodylus palustris
Lesson, 1831
Distribution of Crocodylus palustris

சதுப்புநில முதலை (Crocodylus palustris)[2] என்பது ஒரு முதலை இனம் ஆகும். இவை இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் காணப்படுகின்றன. இந்தியாவை சுற்றியுள்ள பாக்கித்தான், இலங்கை போன்ற நாடுகளிலும் காணப்படுகிறன. இது பாக்கித்தானின் தேசிய ஊர்வனம் ஆகும்.[3] இது இந்தியாவில் காணக்கூடிய மூன்று முதலைகளில் ஒன்றாகும். ஏனைய இரண்டு இன முதலைகள் சொம்புமூக்கு முதலை, உவர்நீர் முதலை ஆகியனவாகும்.[4] இது பெரும்பாலும் நன்னீர் பகுதியில் குடியிருக்கிற ஒரு நடுத்தர அளவு முதலை ஆகும். இது ஏரிகள், குளங்கள், ஆறுகள் , சதுப்பு நிலப்பகுதிகளில் வாழக்கூடியது.[5]

ஆண் முதலைகள் 4 - 5 மீ (13-16 அடி) வரை வளரும் என்று கூறப்படுகிறது. பெண் முதலைகள் ஆண் முதலைகளைவிட சிறியதாக இருக்கும்.[6] இந்த முதலைகள் குறுகிய அகன்ற நீள்மூக்கு கொண்டிருக்கும். வளர்ந்த முதலையானது இடலை நிறத்தில் இருக்கும். இதன் உடல் முழுவதும் எலும்புடைய பாதுகாப்புத் தகடு கொண்டிருக்கும். இது மீன்கள், தவளைகள், பறவைகள், சிறிய பாலூட்டிகள் போன்றவற்றை உண்டு வாழும். வெள்ளம் வறட்சி, உறைவிட அழிப்பு, தோலுக்காக வேட்டையாடுதல், முட்டைகளை உட்கொள்ளுதல் போன்றவற்றால் இவற்றிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தற்போது இது அழிவாய்ப்புள்ள இனங்கள் பட்டியலில் உள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. Choudhury, B.C. & de Silva, A. (2008). "Crocodylus palustris". The IUCN Red List of Threatened Species (IUCN) 2008: e.T5667A3046723. doi:10.2305/IUCN.UK.2013-2.RLTS.T5667A3046723.en. https://www.iucnredlist.org/species/5667/3046723. 
  2.  "Marsh Crocodile". Encyclopedia Americana. 1920. 
  3. "National Symbols and Things of Pakistan". Government of Pakistan. பார்க்கப்பட்ட நாள் 2013-11-27.
  4. Hiremath, K.G.. Recent advances in environmental science. Discovery Publishing House, 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7141-679-9. 
  5. Da Silva, A. and Lenin, J. (2010). "Mugger Crocodile Crocodylus palustris, pp. 94–98 in S.C. Manolis and C. Stevenson (eds.) Crocodiles. Status Survey and Conservation Action Plan. 3rd edition, Crocodile Specialist Group: Darwin.
  6. Mugger (Crocodylus palustris) பரணிடப்பட்டது 2017-07-13 at the வந்தவழி இயந்திரம். Arkive. Retrieved on 2013-04-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதுப்புநில_முதலை&oldid=3761783" இலிருந்து மீள்விக்கப்பட்டது