இந்திய நீள்காது முள்ளெலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய நீள்காது முள்ளெலி [1]
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணிகள்
வகுப்பு: பாலூட்டிகள்
வரிசை: Erinaceomorpha
குடும்பம்: Erinaceidae
துணைக்குடும்பம்: முள்ளெலிகள் [note 1]
பேரினம்: Hemiechinus
இனம்: H. collaris
இருசொற் பெயரீடு
Hemiechinus collaris
(கெரே[note 2] , 1830)

இந்திய நீள்காது முள்ளெலி (Indian Long-eared Hedgehog, விலங்கியல் இருசொற்பெயர்: Hemiechinus collaris) என்றழைக்கப்படும் இந்த முள்ளெலி இனம், பெரும்பாலும் இந்தியாவின் வடபகுதியில் காணப்படுகிறது.

வாழிடம்[தொகு]

இந்த இன முள்ளெலியின் தாயகம் இந்தியாவும், பாகிசுதானும் எனக் கண்டறியப் பட்டுள்ளது. நன்கு உறுதி செய்யப்பட்ட வகைப்பாட்டியியல் காரணங்களால், இந்திய நீள்காது முள்ளெலி இனம், நீள்காது முள்ளெலி[note 3] யின், கீழ் இருக்கும் சிற்றினமாகக் கருதப் படுகிறது.

கடலிலிருந்து அலைகள் வந்து செல்லும், நிலப்பரப்பில் மட்டுமே இவை வாழ்கின்றன. குறிப்பாக, 15 மீட்டர் கடல் மட்ட உயரமுள்ள நிலப்பகுதிகளில் மட்டுமே வாழ்கின்றன என்று இங்கிலாந்து கடலாய்வினர் கண்டறிந்துள்ளனர்[3].

வளரியல்பு[தொகு]

  • இதன் நீளம் ~17 செ.மீ ஆகும். உடலின் எடை ~200-500 கிராம் இருக்கிறது.
  • உடல் சிறியதாகவும், இதன் காதுகள் நன்கு பெரியதாக உள்ளன. ஒப்பிட்டளவில் இவ்வினத்தின் காது, நீள்காது முள்ளெலியின் காதினைப் போன்றே இருக்கிறது.
  • இனப்பெருக்கக் காலத்தில், இவ்வினத்தின் ஆண் முள்ளெலி குறிப்பிட்ட நாட்களுக்கு, பெண் முள்ளெலிகளின் முன்னே நடனமாடுகிறது. அதறகு பின் தான், அவை இனப்பெருக்கக் கலவியில் ஈடுபடுகின்றன. இக்குணம் இவற்றின் சிறப்பியல்புகளில் ஒன்றாகும்.

குறிப்புகள்[தொகு]

  1. Erinaceinae - முள்ளெலிகள்
  2. John Edward Gray-கெரே
  3. நீள்காது முள்ளெலி - Hemiechinus auritus

மேற்கோள்கள்[தொகு]

  1. இந்திய நீள்காது முள்ளெலி - Hemiechinus collarisஅட்டெரெர்(Hutterer, Rainer) (நவம்பர் 16, 2005). Don E. Wilson and DeeAnn M. Reeder. ed. Mammal Species of the World (3 ). Johns Hopkins பல்கலைக் கழகப் பதிப்பகம். பக். 215. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8018-8221-0. http://www.bucknell.edu/msw3. 
  2. Insectivore Specialist Group (1996). Hemiechinus collaris. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 2006-மே 12. அன்று அதன் தரவுதளத்தில், இவ்வினத்திற்கு குறைந்த அழிவாய்ப்பு இருப்பதற்கானக் காரணம் சேர்க்கப்பட்டது.
  3. - ஆங்கில வர்ணனை jf பகுதியை பார்க்கவும். (see the description info)[தொடர்பிழந்த இணைப்பு]

இதர இணைய இணைப்புகள்[தொகு]