கல் குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கல் குருவி
Indian Courser (Cursorius coromandelicus) at Bharatpur I IMG 5437.jpg
கேவலாதேவ் தேசியப் பூங்கா, இராசத்தான், இந்தியா
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: சரத்ரீபார்மசு
குடும்பம்: Glareolidae
பேரினம்: Cursorius
இனம்: C. coromandelicus
இருசொற் பெயரீடு
Cursorius coromandelicus
(Gmelin, 1789)

கல் குருவி (Indian courser -- Cursorius coromandelicus) என்பது ஒரு வகைப் பறவையாகும். முக்கியமாக  தென் ஆசியா, கங்கை மற்றும் சிந்து நதி அமைப்புகளால் சூழப்பட்ட சமவெளிகளிலும் காணப்படும்.  இது ஒரு தரைப் பறவை ஆகும்.

விளக்கம்[தொகு]

இது தெற்கு ஆசியா முழுவதுமே பரவலாகக் காணப்படுகிறது. சாம்பல்-பழுப்பு கலந்த மேல்பாகம் மற்றும் மஞ்சள் கலந்த சிவப்பு கீழ் பாகம் கொண்டது; மேலும் கருப்பு அடி வயிறும் செம்பழுப்பு உச்சந்தலையும் பிரதானமான வெள்ளைப்புருவக் கோடும் கருப்பு கண் பட்டையும் இக்குருவியை எளிதில் இனம் காண உதவும் களக்குறிப்புகளாகும்.[2][3]

உடலமைப்பு[தொகு]

26 செ.மீ.-தோற்றத்தில் ஆள்காட்டியை ஒத்த இதன் உடல் மணல் பழுப்பாகவும் மார்பும் வயிறும் செம்பழுப்பும் கரும்புமாகவும் இருக்கும். நீண்ட கால்கள், சற்றே வளைந்த அலகு, கண்ணுக்கு மேலான வெண்புருவம் ஆகியன அடையாளம் காட்டுவன. தோல் குருவியைப் போலப் பறக்கும். பறக்கும் போது இறக்கைகளின் அடிப்பாகம் கரும்பழுப்பாகத் தோற்றம் தரும்.

பரவலும் வாழ்விடமும்[தொகு]

கல்லும் கரடுமான பகுதிகள், ஊர்ப்புறங்களை அடுத்த மேய்ச்சல் நிலங்கள், புஞ்சைக்காடுகள் ஆகியவற்றில் காணலாம். நீர்வளம் மிக்க நஞ்சைப் பகுதிகளை விரும்புவதில்லை. இது திரியும் தரைப் பகுதியும் இதன் உடல் நிறமும் ஒத்துப் போவதால் இது இருப்பதைக் கண்டு கொள்வது கடினம்.

உணவு[தொகு]

அடிக்கடி தலை தாழ்த்தி வண்டு, சில்வண்டு, வெட்டுக்கிளி அகியவற்றைப் பிடிக்கும்.

இனப்பெருக்கம்[தொகு]

மார்ச் முதல் ஆகஸ்ட் வரை சிறு குழி பறித்து 2 அல்லது 3 முட்டைகள் இடும்.[4] இந்தப் பறவைகளின் குஞ்சுகள் பொரித்த உடனேயே ஓடித்திரியும் திறன் கொண்டவை.

வெளி இணைப்புகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Cursorius coromandelicus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.
  2. ராஸ்முசன் PC; JC ஆண்டர்டான் (2005). Birds of South Asia: The Ripley Guide. Volume 2. Smithsonian Institution & Lynx Edicions. பக். 184. 
  3. சார்ப்பே, R பவுடலர் (1896). Catalogue of the birds in the British Museum. Volume 24. British Museum, London. பக். 39–40. https://archive.org/stream/catalogueofbirds24brit#page/39/mode/1up/. 
  4. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம், பக்கம் எண்:56
Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cursorius coromandelicus
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்_குருவி&oldid=2938378" இருந்து மீள்விக்கப்பட்டது