வேட்டைக்கார ஆந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வேட்டைக்கார ஆந்தை
Brown Hawk-Owl - Ninox scutulata.jpg
வேட்டைக்கார ஆந்தை, தாய்லாந்து
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: இசுட்ரைசிபோர்மெசு
குடும்பம்: இசுட்ரைசிடே
பேரினம்: நினோக்சு
இனம்: N. scutulata
இருசொற் பெயரீடு
Ninox scutulata
(இசுடாம்போர்ட் ராப்லிசு, 1822)

வேட்டைக்கார ஆந்தை (ஆங்கில மொழி: Brown hawk-owl) என்பது ஒருவகை ஆந்தை ஆகும். இப்பறவை தெற்கு ஆசியாவின் இந்தியா, இலங்கை மேற்கு, கிழக்கு இந்தோனேசியா, தெற்கு சீனா போன்ற பகுதிகளில் காணப்படுகிறது. . வேட்டைக்கார ஆந்தை வெப்பமண்டலத்தில் வாழக்கூடிய பறவை ஆகும். இது நன்கு மரங்களடர்ந்த காடு மற்றும் காடு போன்ற பகுதிகளில் வசிக்கிறது. இது மரப்பொந்துகளில் மூன்று முதல் ஐந்து முட்டைகள் இடும்.

வேட்டைக்கார ஆந்தைகள் நடுத்தர அளவுகொண்டவை (32 செ.மீ) ஆகும்.

இந்த வகை ஆந்தை இனங்கள் பெரும்பாலும் இரவு நேரங்களில் வெளிவருகின்றன. இது பெரிய பூச்சிகள், தவளைகள், பல்லிகள், சிறிய பறவைகள், எலிகள் போன்றவற்றை வேட்டையாடி உண்கிறது. கூச்ச சுபாவம் மிக்க இந்தப் பறவையின் குரல் விசித்திரமானது. ஒவ்வொரு முறையும் வேறுவேறு குரல்களில் ஒலி எழுப்பக்கூடியது. அதனால் இதை அடையாளம் காண்பதில் சிக்கல் உள்ளது.

மேலும் படங்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. BirdLife International (2012). "Ninox scutulata". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேட்டைக்கார_ஆந்தை&oldid=2679627" இருந்து மீள்விக்கப்பட்டது