விதிஷா மாவட்டம்
Appearance
விதிஷா மாவட்டம், இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் விதிஷா ஆகும். இம்மாவட்டத்தில் உதயகிரி குகைகள் உள்ளது.
புவியமைப்பு
[தொகு]இது வடகிழக்கில் அசோகக்நகர், கிழக்கில் சாகர், தெற்கில் ராய்சென், வடக்கில் போபால் ஆகிய மாவட்டங்கள் சூழ்ந்துள்ளன. புகழ் பெற்ற புத்தர் சிலைகளைக் கொண்ட சாஞ்சி, ஹேலியோடோரஸ் தூண் போன்ற புராதன சின்னங்களைக் கொண்ட விதிஷா ஆகிய நகரங்கள் இங்குள்ளன.