தேவாஸ் மாவட்டம்
தேவாஸ் மாவட்டம் देवास ज़िला | |
---|---|
தேவாஸ்மாவட்டத்தின் இடஅமைவு மத்தியப் பிரதேசம் | |
மாநிலம் | மத்தியப் பிரதேசம், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | உஜ்ஜைன் கோட்டம் |
தலைமையகம் | தேவாஸ் |
பரப்பு | 7,020 km2 (2,710 sq mi) |
மக்கட்தொகை | 1,563,715 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 223/km2 (580/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 28.89% |
படிப்பறிவு | 69.35% |
பாலின விகிதம் | 942 |
வட்டங்கள் | 9 |
மக்களவைத்தொகுதிகள் | 1 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
தேவாஸ் மாவட்டம் (Dewas District) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் தேவாஸ் ஆகும். இது உஜ்ஜைன் கோட்டத்தில் அமைந்துள்ளது.
தேவாஸ் மாவட்டத்தில் நர்மதை ஆறு, காளி சிந்து ஆறு மற்றும் சிப்ரா ஆறு பாய்கிறது.
மாவட்ட எல்லைகள்[தொகு]
தேவாஸ் மாவட்டத்தின் வடக்கே சாஜாபூர் மாவட்டம், கிழக்கில் செஹோர் மாவட்டம், தென்கிழக்கில் ஹர்தா மாவட்டம், மேற்கில் இந்தூர் மாவட்டம், வடமேற்கில் உஜ்ஜைன் மாவட்டம், தெற்கில் கர்கோன் மாவட்டம், தென்மேற்கில் கண்ட்வா மாவட்டம் எல்லைகளாக உள்ளது.
மாவட்ட நிர்வாகம்[தொகு]
தேவாஸ் மாவட்டம் சோன்கட்ச், தேவாஸ், பக்லி, கன்னோட், கதேகோன், டோங்க்-குர்து ,ஹத்பிப்பிலியா, சத்வாஸ் மற்றும் உதய்நகர் என ஒன்பது வருவாய் வட்டங்களைக் கொண்டது.
போக்குவரத்து[தொகு]
தேவாஸ் நகரம் மும்பை - ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேற்கு தொடருந்து மண்டலத்தின் இருப்புப்பாதைகள் தேவாஸ் மாவட்டத்தை நாட்டின் முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது.[1]
மக்கள் தொகையியல்[தொகு]
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,563,715 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 28.89% மக்களும்; நகரப்புறங்களில் 71.11% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 19.53% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 805,359 ஆண்களும் மற்றும் 758,356 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 942 வீதம் உள்ளனர். 7,020 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 223 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 69.35 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 80.30 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 57.76 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 229,339 ஆக உள்ளது. [2]
சமயம்[தொகு]
இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,376,591 (88.03 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 174,259 (11.14 %) ஆகவும், கிறித்தவ, சீக்கிய, சமண, பௌத்த சமய மக்கள் தொகை கணிசமாக உள்ளது.
மொழிகள்[தொகு]
மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
![]() |
உஜ்ஜைன் மாவட்டம் | சாஜாபூர் மாவட்டம் | ![]() | |
இந்தூர் மாவட்டம் | ![]() |
செஹோர் மாவட்டம் | ||
| ||||
![]() | ||||
கர்கோன் மாவட்டம் | கண்ட்வா மாவட்டம் | ஹர்தா மாவட்டம் |