அசோக்நகர் மாவட்டம்
அசோக்நகர் மாவட்டம் Ashoknagar अशोकनगर जिला | |
---|---|
மாநிலம் | மத்தியப் பிரதேசம், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | குவாலியர் கோட்டம் |
தலைமையகம் | அசோக்நகர் |
பரப்பு | 4,673.94 km2 (1,804.62 sq mi) |
மக்கட்தொகை | 844,979 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 181/km2 (470/sq mi) |
படிப்பறிவு | 67.90 |
பாலின விகிதம் | 900 |
மக்களவைத்தொகுதிகள் | குனா |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
அசோக்நகர் மாவட்டம் (Ashoknagar, இந்தி:अशोकनगर जिला) மாவட்டம் இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்திலுள்ள மாவட்டங்களுள் ஒன்று ஆகும்.[1] இம்மாவட்டத்தின் தலைநகரம் அசோக்நகர் ஆகும். இம்மாவட்டமானது 2003 ஆம் வருடம் ஆகத்து மாதம் 15 ஆம் தியதி குனா மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது.
இம்மாவட்டம் புந்தேல்கண்ட் புவியியல் பகுதியில் அமைந்துள்ளது
அமைப்பு
[தொகு]இம்மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 4773.94 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இம்மாவட்டத்தின் மேற்கே சிந்து நதியும், கிழக்கே பேட்வா ஆறும் ஓடுகிறது.
மக்கள் தொகை
[தொகு]2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 6,88,920 ஆகும்.
வரலாறு
[தொகு]இம்மாவட்டமானது 2003 ஆம் வருடம் ஆகத்து மாதம் 15 ஆம் தியதி குணா மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. பண்டையக் காலத்தில் இப்பகுதியானது சிந்தியா குடும்பத்தினரால் ஆளப்பட்டது. இது குவாலியர் பகுதிக்கு உட்பட்டிருந்தது. அசோகர் உஜ்ஜயினி வெற்றிக்குப் பிறகு இரவு இங்கே தங்கியதால் இவ்விடத்திற்கு அசோக்நகர் எனப் பெயர் வந்தது.
காலநிலை
[தொகு]இம்மாவட்டத்தின் சராசரி வெப்பநிலை கோடைக்காலத்தில் 47 டிகிரி செல்சியசாகவும் குளிர்காலத்தில் 4 டிகிரி செல்சியசாகவும் இருக்கும்.
உட்பிரிவுகள்
[தொகு]இந்த மாவட்டத்தை வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை அசோக்நகர், சன்தேரி, முங்காவ்லி, இசாகட் ஆகியன.
இந்த மாவட்டம் மத்தியப் பிரதேச சட்டமன்றத்துக்கு மூன்று தொகுதிகளின் மூலம் முன்னிறுத்தப்படுகிறது.[1]
இதனையும் காண்க்
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-11-17.
இணைப்புகள்
[தொகு]