சந்தேரி

ஆள்கூறுகள்: 24°43′N 78°08′E / 24.72°N 78.13°E / 24.72; 78.13
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்தேரி
चन्देरी
چندےري
நகரம்
சந்தேரி நகரம்
சந்தேரி நகரம்
அடைபெயர்(கள்): ऐतिहासिक नगरी चंदेरी
சந்தேரி is located in மத்தியப் பிரதேசம்
சந்தேரி
சந்தேரி
இந்தியாவின் மத்தியப் பிரதே மாநிலத்தில் சந்தேரி ஊரின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 24°43′N 78°08′E / 24.72°N 78.13°E / 24.72; 78.13
நாடு இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்அசோக்நகர்
தோற்றுவித்தவர்இராஜா சிசுபாலன்
பெயர்ச்சூட்டுசேதி நாடு
அரசு
 • வகைநகராட்சி மன்றக் குழு
பரப்பளவு
 • மொத்தம்10.7 km2 (4.1 sq mi)
ஏற்றம்456 m (1,496 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்33,081[1]
மொழிகள்
 • அலுவல் மொழிகள்புந்தேலிகண்டி, இந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்473446
தொலைபேசி குறியீடு07547
வாகனப் பதிவுMP 67
இணையதளம்http://chanderi.org

சந்தேரி (Chanderi) (இந்தி: चंदेरी ) இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் அசோக்நகர் மாவட்டத்தில் நகராட்சி மன்றக் குழுவுடன் அமைந்த ஊராகும்.

லலித்பூரிலிருந்து 37 கிலோ மீட்டர் தொலைவிலும், இதன் மாவட்டத் தலைமையிட நகரமான அசோக்நகரத்திலிருந்து 55 கிலோ மீட்டர் தொலைவிலும் சந்தேரி நகரம் உள்ளது.

பேட்வா ஆற்றிற்கு தென்மேற்கே அமைந்த இந்த நகரத்தைச் சுற்றிலும் மலைகளாலும், காடுகளாலும் சூழப்பட்டது.

சந்தேரி நகரத்தில் சந்தேல இராசபுத்திர மன்னர்கள் மற்றும் மால்வா சுல்தான்களின் நினைவுச் சின்னங்கள் உள்ளது.

வரலாறு[தொகு]

1528ல் முகலலாயப் பேரரசர் பாபரின் படைகள் சந்தேரி கோட்டையைக் கைப்பற்றுதல்

மால்வா மற்றும் புந்தேல்கண்ட் இடையே அமைந்த சந்தேரி நகரம் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.

சந்தேரி நகரம் 11-ஆம் நூற்றாண்டில் மத்திய இந்தியாவின் வணிக மையமாக விளங்கியது.

மகாபாரத காவியத்தில் சேதி நாட்டு மன்னர் சிசுபாலனின் தலைநகராகச் சந்தேரி நகரத்தை குறிப்பிடுகிறது. தில்லி சுல்தானின் படைத்தலைவர் கியாசுதீன் பால்பன் 1251ல் சந்தேரி நகரத்தைக் கைப்பற்றினார். 1438ல் தில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி சந்தேரியை கைப்பற்றினார். 1520 மேவார் மன்னர் ராணா சங்கா சந்தேரியைக் கைப்பற்றி, தில்லி சுல்தானகத்தின் இராசபுத்திர அமைச்சர் மேதினிராஜிடம் ஒப்படைத்தார். சந்தேரிப் போரில் முகலாய மன்னர் பாபர், சந்தேரியைக் கைப்பற்றினார். [2]

1540ல் தில்லி ஆப்கானியச் சுல்தான் சேர் சா சூரி சந்தேரி நகரத்தைக் கைப்பற்றினார். அக்பர் ஆட்சிக் காலத்தில், மால்வா ஆளுநகரத்தின் தலைமையிடமாக சந்தேரி நகரம் விளங்கியது. [3]அயினி அக்பரி எனும் அக்பரின் தன் வரலாறு நூலில், சந்தேரி நகரம் 14,000 கல் வீடுகளும். 384 வணிகச் சந்தைகளும், 380 சாவடிகளும், குதிரை லாயங்களும் மற்றும் 1,200 மசூதிகளும் இருந்ததாக குறிப்பிட்டுள்ளது.

1586ல் சந்தேல இராசபுத்திரர்கள் சந்தேரி நகரத்தைக் கைப்பற்றினர். பிரித்தானியர்கள் 1811ல் சந்தேரி நகரத்தை குவாலிய இராச்சியத்துடன் இணைத்தனர். 1844ல் சந்தேரி நகரம் பிரித்தானிய இந்தியா ஆட்சியில் இணைக்கப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பின்னர், சந்தேரி நகரம், மத்தியப் பிரதேச மாநிலத்த்துடன் இணைக்கப்பட்டது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, சந்தேரி நகரத்தின் மொத்த மக்கள்தொகை 28,313 ஆகும். அதில் ஆண்கள் 52% மற்றும் பெண்கள் 48% உள்ளனர். எழுத்தறிவு 62% ஆகும். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 17% ஆகும்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.census2011.co.in/data/town/802407-chanderi.html
  2. The Mughal Throne by Abraham Eraly pg 33
  3. Abū al-Fazl ibn Mubārak, The Ain - I - Akbari, Volume 2, page 196
  4. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  • Hunter, William Wilson, James Sutherland Cotton, Richard Burn, William Stevenson Meyer, eds. (1909).
  • Imperial Gazetteer of India, vol. 9. Oxford, Clarendon Press.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chanderi
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தேரி&oldid=3242915" இலிருந்து மீள்விக்கப்பட்டது