குனா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குனா மாவட்டம்
Guna गुना जिला
Madhya Pradesh district location map Guna.svg
குனாமாவட்டத்தின் இடஅமைவு மத்தியப் பிரதேசம்
மாநிலம் மத்தியப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள் குவாலியர் கோட்டம்
தலைமையகம் குனா
பரப்பு 6,485 km2 (2,504 சது மை)
மக்கட்தொகை 1,240,938 (2011)
மக்கள்தொகை அடர்த்தி 194/km2 (500/சது மை)
நகர்ப்புற மக்கட்தொகை 24.46%
படிப்பறிவு 65.1 %
பாலின விகிதம் 910
வட்டங்கள் 1. குனா, 2. ராகோகட், 3. அரோன், 4. கும்ப்ராஜ் 5. சாச்சவுடா
மக்களவைத்தொகுதிகள் 1. குனா 2. ராஜ்கட்
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 1. பமோரி, 2. குனா, 3. சாச்சவுரா, 4. ராகோகட்
சராசரி ஆண்டு மழைபொழிவு 65 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

குனா மாவட்டம் (Guna) இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள 50 மாவட்டங்களுள் ஒன்று ஆகும். இதன் தலைமையகம் குனா என்னும் நகரத்தில் உள்ளது. இம்மாவட்டத்திலிருந்து சில பகுதிகள் 2003 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15 ஆம் நாள் அசோக்நகர் மாவட்டம் என பிரிக்கப்பட்டது.

அமைப்பு[தொகு]

இம்மாவட்டம் 6485 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது. இம்மாவட்டத்தில் எல்லைகளாக

  • கிழக்கே அசோக்நகர் மாவட்டமும்
  • தென்மேற்கே ராகார் மாவட்டமும்
  • தென்கிழக்கே விதிஷா மாவட்டமும்
  • வடமேற்கே இராஜஸ்தானின் சலாவார் மாவட்டமும்

அமைந்துள்ளன.

வட்டங்கள்[தொகு]

இம்மாவட்டம் 4 தாலுகாக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

  • குனா
  • ராகோகட்
  • ஆரோன்
  • சான்சோடா

மக்கள் தொகை[தொகு]

2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 12,40,938 ஆகும்.[1] மக்கள் அடர்த்தி சதுர கிலோமீர்டருக்கு 194 என்ற விகிதத்தில் உள்ளது.[1] கல்வியறிவு 65.15% ஆகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குனா_மாவட்டம்&oldid=2046016" இருந்து மீள்விக்கப்பட்டது