உஜ்ஜைன் மாவட்டம்
உஜ்ஜைன் மாவட்டம் उज्जैन जिला | |
---|---|
உஜ்ஜைன்மாவட்டத்தின் இடஅமைவு மத்தியப் பிரதேசம் | |
மாநிலம் | மத்தியப் பிரதேசம், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | உஜ்ஜைன் கோட்டம் |
தலைமையகம் | உஜ்ஜைன் |
பரப்பு | 6,091 km2 (2,352 sq mi) |
மக்கட்தொகை | 19,86,864 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 326/km2 (840/sq mi) |
படிப்பறிவு | 73.55% |
பாலின விகிதம் | 954 |
மக்களவைத்தொகுதிகள் | உஜ்ஜைன் நாடாளுமன்றத் தொகுதி |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
உஜ்ஜைன் மாவட்டம் (Ujjain District) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் உஜ்ஜைன் ஆகும். இம்மாவட்டம் உஜ்ஜைன் கோட்டத்தில் அமைந்துள்ளது.
புவியியல்[தொகு]
6091 சதுர கிலோ மீட்டர பரப்பளவு கொண்ட உஜ்ஜைன் மாவட்டத்தின் வடகிழக்கில் சாஜாபூர் மாவட்டம், கிழக்கிலும், வடகிழக்கிலும் தேவாஸ் மாவட்டம், தெற்கில் இந்தூர் மாவட்டம், தென்மேற்கில் தார் மாவட்டம், தென்மேற்கில் ரத்லாம் மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.
ஆறுகள்[தொகு]
இம்மாவட்டத்தின் கிழக்கில் சம்பல் ஆற்றின் துணை ஆறான சிப்பிரா ஆறு மற்றும் அதன் துண ஆறுகளான காம்பீர் ஆறு மற்றும் கான் ஆறும் பாய்கிறது
மாவட்ட நிர்வாகம்[தொகு]
உஜ்ஜைன் மாவட்டம் உஜ்ஜைன், காய்த்தியா, மகித்பூர், தாரணா, பக்மகர், கட்சிரோடு மற்றும் நாக்டா என ஆறு வருவாய் வட்டங்களைக் கொண்டது.
இம்மாவட்டம் ஒரு மாநகரமும், ஒன்பது நகரங்களும், ஆறு ஊராட்சி ஒன்றியங்களும், 611 பஞ்சாயத்து கிராமங்களும், 1101 கிராமங்களும், இருபத்து ஆறு காவல் நிலையங்களும் கொண்டுள்ளது.[1]
அரசியல்[தொகு]
இம்மாவட்டம் உஜ்ஜைன் வடக்கு, உஜ்ஜைன் தெற்கு, கட்சிரோடு-நாக்டா, மகித்பூர், தாரனா, காட்டியா மற்றும் பத்நகர் என ஏழு சட்டமன்ற தொகுதிகளை கொண்டது. மேலும் உஜ்ஜைன் நாடாளுமன்ற தொகுதியில் இம்மாவட்டத்தின் சட்டமன்ற தொகுதிகள் அடங்குகிறது.
ஆன்மிகம்[தொகு]
பனிரெண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான மகாகாளேஸ்வரர் கோயில், இம்மாவட்டத்தின் தலைமையிட நகரமான உஜ்ஜைனில் உள்ளது.[2]
மக்கள் தொகையியல்[தொகு]
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாவட்டத்தின் மொத்த மக்கள் 19,86,864 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 12,07,651 மக்களும்; நகரப்புறங்களில் 7,79,213 மக்களும் வாழ்கின்றனர். . பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 954 பெண்கள் வீதம் உள்ளனர். 6,091 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 326 நபர்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 73.55% ஆக உள்ளது.
சமயம்[தொகு]
இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை பெரும்பான்மையாகவும், இசுலாம் மற்றும் பிற சமய மக்கள் தொகை கனிசமாகவும் உள்ளது.
மொழிகள்[தொகு]
மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
![]() |
ரத்லாம் மாவட்டம் | அகர் மால்வா மாவட்டம் | சாஜாபூர் மாவட்டம் | ![]() |
ரத்லாம் மாவட்டம் | ![]() |
சாஜாபூர் மாவட்டம் | ||
| ||||
![]() | ||||
தார் மாவட்டம் | இந்தூர் மாவட்டம் | தேவாஸ் மாவட்டம் |