சித்தி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்தி மாவட்டம்
सिधी जिला
MP Sidhi district map.svg
சித்திமாவட்டத்தின் இடஅமைவு மத்தியப் பிரதேசம்
மாநிலம்மத்தியப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்ரேவா கோட்டம்
தலைமையகம்சித்தி
மக்கட்தொகை1,127,033. (2011)
வட்டங்கள்6
மக்களவைத்தொகுதிகள்சித்தி
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

சித்தி மாவட்டம் (Sidhi district) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் சித்தி ஆகும். இது ரேவா கோட்டத்தில் அமைந்துள்ளது.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

ரேவா வருவாய் கோட்டத்தில் உள்ள சித்தி மாவட்டம் கோபத் பனாஸ், சுர்ஹட், ராம்பூர் நய்கின், மஜ்ஜௌளி, குஷ்மி மற்றும் பத்பாரா என ஆறு வருவாய் வட்டங்களைக் கொண்டது.

சித்தி மாவட்டம் சித்தி, ராம்பூர், குஷ்மி, சிக்வால், மஜ்ஜௌளி என ஐந்து ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டது.

மக்கள் தொகையியல்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,127,033. ஆக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 23.72% ஆக உயர்ந்துள்ளது. இம்மாவட்டத்தின் படிப்பறிவு 67.4% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 36.0% ஆகவும் உள்ளது. [1]

மொழிகள்[தொகு]

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

இதனையும் காண்க[தொகு]

மாவட்ட எல்லைகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 24°25′00″N 81°53′00″E / 24.4167°N 81.8833°E / 24.4167; 81.8833

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தி_மாவட்டம்&oldid=3369813" இருந்து மீள்விக்கப்பட்டது