நிவாரி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நிவாரி
மாவட்டம்
நாடுஇந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
கோட்டம்சாகர் கோட்டம்
நிறுவிய ஆண்டு1 அக்டோபர் 2018
தலைமையிடம்நிவாரி
வருவாய் வட்டங்கள்நிவாரி, ஓர்ச்சா, பிரித்திவிபூர்
அரசு
 • மக்களவைத் தொகுதிதிகம்கர்
 • சட்டமன்றத் தொகுதிகள்நிவாரி, பிரித்திவிபூர்
பரப்பளவு
 • Total1,170 km2 (450 sq mi)
மக்கள்தொகை (2011)
 • Total4,04,807
 • அடர்த்தி350/km2 (900/sq mi)
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)
இணையதளம்https://niwari.nic.in/en/

நிவாரி மாவட்டம் (Niwari district) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் புந்தேல்கண்ட் பிரதேசத்தில் அமைந்த 52-வது புதிய மாவட்டம் ஆகும். இதன் நிர்வாகத் தலைவமையிடம் நிவாரி நகரம் ஆகும். இந்திய விடுதலைக்கு முன்னர் இம்மாவட்டம் ஓர்ச்சா சமஸ்தானத்தின் பகுதியாக இருந்தது.

புந்தேல்கண்ட் பகுதியில் உள்ள திகம்கர் மாவட்டத்தின் மூன்று வருவாய் வட்டங்களைக்க் கொண்டு இப்புதிய நிவாரி மாவட்டம் 1 அக்டோபர் 2018 அன்று நிறுவப்பட்டது. [1][2][3]

மாவட்ட நிர்வாகம்[தொகு]

மத்தியப் பிரதேசத்தின் மிகச் சிறிய மாவட்டமான நிவாரி மாவட்டத்தின் பரப்பளவு 1,170 சதுர கிலோ மீட்டர் ஆகும். இம்மாவட்டம் நிவாரி, ஓர்ச்சா, பிரித்திவிபூர் எனும் மூன்று வருவாய் வட்டங்களும், 281 கிராமங்களும் கொண்டது. மேலும் இம்மாவட்டத்தில் நிவாரி, ஓர்ச்சா, தரிச்சார் கலான், ஜெரோன் கல்சா மற்றும் பிரித்திவிபூர் என 5 நகராட்சிகளும் கொண்டது. இதன் மக்கள்தொகை 4,04,807 ஆகும்.இம்மாவட்டத்தின் ஆட்சி மொழி இந்தி ஆகும். [4]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிவாரி_மாவட்டம்&oldid=3372855" இருந்து மீள்விக்கப்பட்டது