திகம்கர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திகம்கர் மாவட்டம்
टीकमगढ़ जिला
Madhya Pradesh district location map Tikamgarh.svg
திகம்கர்மாவட்டத்தின் இடஅமைவு மத்தியப் பிரதேசம்
மாநிலம்மத்தியப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்சாகர் கோட்டம்
தலைமையகம்டிக்கம்கர்
பரப்பு5,048 km2 (1,949 sq mi)
மக்கட்தொகை1,445,166 (2011)
மக்கள்தொகை அடர்த்தி286/km2 (740/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை17.29%
படிப்பறிவு61.43%
பாலின விகிதம்901
வட்டங்கள்9
மக்களவைத்தொகுதிகள்டிக்கம்கர் மக்களவைத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை5
முதன்மை நெடுஞ்சாலைகள்NH-12A, SH10
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

திகம்கர் மாவட்டம் அல்லது டிக்கம்கர் மாவட்டம் (Tikamgarh district) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் டிக்கம்கர் ஆகும். இது சாகர் கோட்டத்தில் புந்தேல்கண்ட் புவியியல் பகுதியில் அமைந்துள்ளது.

பொருளாதாரம்[தொகு]

பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய 250 இந்திய மாவட்டங்களில் செஹோர் மாவட்டமும் ஒன்றாக இந்திய அரசால் 2006- ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் ஊரக வளர்ச்சி திட்டங்களுக்கு இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆண்டுதோறும் நிதி உதவி வழங்கி வருகிறது.[1]

மாவட்ட நிர்வாகம்[தொகு]

டிக்கம்கர் மாவட்டம் மூன்று உட்கோட்டங்களாகவும்; டிக்கம்கர், பல்தேவ்கர், நிவாரி, பிரிதிவிபூர், ஜாதரா, ஓர்ச்சா, லித்தோரக்காஸ், கர்க்காபூர் மற்றும் பலேரா என ஒன்பது வருவாய் வட்டங்களைக் கொண்டது.

மேலும் ஊரக வளர்ச்சி திட்டங்களை நடைமுறைப்படுத்த டிக்கம்கர், பல்தேவ்கர், ஜாதரா, பலேரா, நிவாரி மற்றும் பிரிதிவிபூர் என ஆறு ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டுள்ளது.

அரசியல்[தொகு]

டிக்கம்கர் மாவட்டம் டிக்கம்கர், பிரிதிவிபூர், ஜாதரா, கர்காபூர், நிவாரி என ஐந்து சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது. இவ்வைந்து சட்டமன்ற தொகுதிகளும் டிக்கம்கர் நாடாளுமன்ற மக்களவை தொகுதியின் கீழ் வருகிறது.

மக்கள் தொகையியல்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,445,166 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 82.71% மக்களும்; நகரப்புறங்களில் 17.29% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 20.13% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 760,355 ஆண்களும் மற்றும் 684,811 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் வீதம் உள்ளனர். 5,048 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 901 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 61.43% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 71.77% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 49.97% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 227,564 ஆக உள்ளது. [2]

சமயம்[தொகு]

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,383,475 (95.73 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 44,143 (3.05 %) ஆகவும், கிறித்தவ, சீக்கிய, சமண, பௌத்த சமய மக்கள் தொகை கணிசமாக உள்ளது.

மொழிகள்[தொகு]

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

மாவட்ட எல்லைகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme". National Institute of Rural Development. பார்த்த நாள் September 27, 2011.
  2. Tikamgarh District : Census 2011 data

வெளி இணைப்புகள்[தொகு]


ஆள்கூற்று: 24°44′24″N 78°49′48″E / 24.74000°N 78.83000°E / 24.74000; 78.83000

"https://ta.wikipedia.org/w/index.php?title=திகம்கர்_மாவட்டம்&oldid=2069771" இருந்து மீள்விக்கப்பட்டது