சிவபுரி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிவபுரி மாவட்டம்
शिवपुरी जिला
Madhya Pradesh Shivpuri location map.svg
சிவபுரிமாவட்டத்தின் இடஅமைவு மத்தியப் பிரதேசம்
மாநிலம் மத்தியப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள் குவாலியர் கோட்டம்
தலைமையகம் சிவபுரி
மக்கட்தொகை 1,726,050 (2011)
மக்கள் அடர்த்தி 171/km2 (440/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை 17.12%
படிப்பறிவு 62.55%
பாலின விகிதம் 877
மக்களவைத்தொகுதிகள் 1
முதன்மை நெடுஞ்சாலைகள் NH3 and NH25
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

சிவபுரி மாவட்டம் (Shivpuri District) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நகரம் சிவபுரி ஆகும். சிவபுரி மாவட்டம் குவாலியர் கோட்டத்தில், புந்தேல்கண்ட் புவியியல் பகுதியில் அமைந்துள்ளது.

மாவட்ட எல்லைகள்[தொகு]

சிவபுரி மாவட்டத்தின் வடக்கில் குவாலியர் மாவட்டம், வடகிழக்கில் ததியா மாவட்டம்,கிழக்கில் ஜான்சி மாவட்டம், (உத்தரப் பிரதேசம்), தென்கிழக்கில் லலித்பூர் மாவட்டம் (உத்தரப் பிரதேசம்), தெற்கில் அசோக்நகர் மாவட்டம், தென்மேற்கில் குணா மாவட்டம், மேற்கில் பரான் மாவட்டம், [ (இராஜஸ்தான்), வடமேற்கில் சியோப்பூர் மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

சிவபுரி மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக போஹ்ரி, சிவபுரி, நார்வார், கரேரா, கோலாரஸ், பதர்வாஸ், பிச்சோர் மற்றும் கன்னியாதானம் என எட்டு வட்டாரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரம்[தொகு]

வறண்ட வானிலை கொண்ட சிவபுரி மாவட்டத்தை 2006-ஆம் ஆண்டில் இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய் இந்தியாவின் 250 மாவட்டங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது. அதனால் இம்மாவட்டத்தின் ஊரக வளர்ச்சி திட்டங்களுக்கு இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆண்டுதோறும் நிதி உதவி வழங்கி வருகிறது.[1]

போக்குவரத்து[தொகு]

ஆக்ரா - மும்பையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 3 மற்றும் லக்னோ, கான்பூர், லலித்பூர் வழியாக சிவபுரியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 25 சிவபுரியின் தரைவழி போக்குவரத்திற்கு உதவுகிறது.

தொடருந்து[தொகு]

சிவபுரி தொடருந்து நிலையம் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளை இருப்புப்பாதை வழியாக இணைக்கிறது. [2]

மக்கள் தொகையியல்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,726,050 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 82.88% மக்களும்; நகரப்புறங்களில் 17.12% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 22.76% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 919,795 ஆண்களும் மற்றும் 806,255 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 877 பெண்கள் வீதம் உள்ளனர். 10,066 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 171 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 62.55% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 74.56% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 48.79% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 285,770 ஆக உள்ளது. [3]

மொத்த மக்கள் தொகையில் பட்டியல் சமூக மக்கள் 18.6% மற்றும் பட்டியல் பழங்குடி மக்கள் 13.2% உள்ளனர்

சமயம்[தொகு]

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,648,749 (95.52 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 51,200 (2.97 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 1,117 (0.06 %) ஆகவும், , சீக்கிய சமய மக்கள் தொகை 7,151 (0.41 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 12,171 (0.71 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 3,421 (0.20 %) ஆகவும், பிற சமய மக்களின் தொகை 72 (0.00 %) ஆகவும், மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 2,169 (0.13 %) ஆகவும் உள்ளது.

மொழிகள்[தொகு]

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

சுற்றுலா[தொகு]

  1. மகாதேவ் தேசியப் பூங்கா[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme". National Institute of Rural Development. பார்த்த நாள் September 27, 2011.
  2. [1]
  3. Shivpuri District : Census 2011 data
  4. Mahadev Naional Park, Madya Pradesh

வெளி இணைப்புகள்[தொகு]


ஆள்கூற்று: 25°25′12″N 77°39′36″E / 25.42000°N 77.66000°E / 25.42000; 77.66000

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவபுரி_மாவட்டம்&oldid=2048366" இருந்து மீள்விக்கப்பட்டது