பரான் மாவட்டம்
Appearance
பரான் மாவட்டம் (Baran) இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். பரான் நகரம் இம்மாவட்டத்தின் தலைமையிடம் ஆகும். மேலும் இம்மாவட்டத்தில் சாப்ரா நகரம் உள்ளது.
காலநிலை
[தொகு]இம்மாவட்டத்தில் பருவமழைக் காலங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களெல்லாம் வறண்ட வானிலையே காணப்படும். ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலம் பருவமழைக் காலமாகும். சராசி மழையளவு 895.2 மில்லிமீட்டர்களாகும். சனவரி மாதஹ்ம் மிக்குளிரான மாதமாகும் . அந்த நேரத்தில் வெப்பநிலை குறைந்த பட்சமாக 10.6 டிகிரி செல்சியஸாகவும் ஆகவும் அதிகபட்ச வெப்பநிலை 24.3 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.
விமான நிலையங்கள்
[தொகு]இம்மாவட்டத்திற்கு அருகிலுள்ள விமான நிலையங்கள்,
- ஜெய்ப்பீர் சர்வதேச விமான நிலையம்
- ஜோத்பூர் விமான நிலையம்
- உதய்ப்பூர் விமான நிலையம்
போன்றவை ஆகும்.
தொலைவு
[தொகு]இம்மாவட்டம்,
- கோடாவிலிருந்து 72 கிலோமீட்டர்கள் தொலைவிலும்
- ஜெய்ப்பூரிலிருந்து 318 கிலோமீட்டர்கள் தொலைவிலும்
- மும்பையிலிருந்து 992 கிலோமீட்டர்கள் தொலைவிலும்
- உதய்ப்பூரிலிருந்து 342 கிலோமீட்டர்கள் தொலைவிலும்
- ஆஜ்மீரிலிருந்து 273 கிலோமீட்டர்கள் தொலைவிலும்
- ஜோத்பூரிலிருந்து 451 கிலோமீட்டர்கள் தொலைவிலும்
- பிகானீரிலிருந்து 506 கிலோமீட்டர்கள் தொலைவிலும்
- சிவ்புரியிலிருந்து 160 கிலோமீட்டர்கள் தொலைவிலும்
- குவாலியரிலிருந்து 260 கிலோமீட்டர்கள் தொலைவிலும்
- ஜான்ஸியிலிருந்து 258 கிலோமீட்டர்கள் தொலைவிலும்
அமைந்துள்ளது.
சுற்றுலாக் காலம்
[தொகு]இம்மாவட்டத்தில் செப்டம்பர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள் சுற்றுலாவுக்கு ஏற்ற மாதங்களாகக் கருதப்படுகிறது.