சித்தாச்சல சமணக் குடைவரைகள்
Appearance
சித்தாச்சல சமணக் குடைவரைகள் | |
---|---|
Colossal Jain statues in Gwalior | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | குவாலியர் கோட்டை |
புவியியல் ஆள்கூறுகள் | 26°13′26.3″N 78°09′54.6″E / 26.223972°N 78.165167°E |
சமயம் | சமணம் |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம் | குவாலியர் |
சித்தாச்சல சமணக் குடைவரைகள் அல்லது சித்தாச்சல குகைகள் (Siddhachal Caves), இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தின் குவாலியர் நகரத்தில் அமைந்த குவாலியர் கோட்டையினுள் சமண சமயத்தின் 24 தீர்த்தங்கரர்களுக்கு அர்பணிக்கப்பட்ட குடைவரைகள் ஆகும். இக்குடைவரைகள் குவாலியரை ஆண்ட தோமரா இராஜபுத்திர மன்னர்கள் கிபி 7-ஆம் நூற்றாண்டில் நிறுவத் தொடங்கினார்கள். பின்னர் ஆண்ட மன்னர்கள் இக்குடைவரைகளை கிபி 15-ஆம் நூற்றாண்டு வரை நிறுவி முடித்தனர். தற்போது இக்குடைவரைகளை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரிக்கிறது.
இங்கு ரிசபநாதரின் 57 அடி உயர சிற்பம், மற்றும் ஐந்தலை நாகத்துடன் கூடிய பார்சுவநாதர் மற்றும் மகாவீரர் சிற்பங்கள் உள்ளது.[1][2][3]
இக்குடைவரை சிற்பங்கள் பாபர் ஆட்சிக் காலத்தில் சிதைக்கப்பட்டது.[4]
படக்காட்சிகள்
[தொகு]-
குவாலியர் கோட்டையின் வெளிப்புறக் காட்சி, 1885
-
தீர்த்தங்கரர்களின் உருவச் சிலைகள்
-
குகையில் தியான நிலையில் ஜீனர்கள்
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kurt Titze; Klaus Bruhn (1998). Jainism: A Pictorial Guide to the Religion of Non-violence. Motilal Banarsidass. pp. 106–110. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1534-6.
- ↑ Gwalior Fort: Rock Sculptures, A Cunningham, Archaeological Survey of India, pages 364-370
- ↑ Gwalior Fort, Archaeological Survey of India, Bhopal Circle, India (2014)
- ↑ Trudy Ring; Noelle Watson; Paul Schellinger (2012). Asia and Oceania: International Dictionary of Historic Places. Routledge. p. 314. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-136-63979-1.