உள்ளடக்கத்துக்குச் செல்

தோமரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தோமரா (Tomara) 9-12ஆம் நூற்றாண்டுகளில் வட இந்தியாவின் தற்கால தில்லி மற்றும் அரியானா பகுதிகளை ஆண்ட இராசபுத்திர அரச குலத்தினர் ஆவார். 12ஆம் நூற்றாண்டில் சௌகான் இராசபுத்திர குலத்தினர் தோமாரா குலத்தினரை வென்றனர்.

வரலாறு[தொகு]

கூர்ஜர பிரதிகாரப் பேரரசர் முதலாம் மகேந்திரபாலனின் (885-910) ஆட்சிக் காலத்திய பொஹோவா (Pehowa) கல்வெட்டுகளில் தோரமரர்களைக் குறித்துள்ளது. கூர்ஜர பிரதிகார வம்சத்தின் விழ்ச்சியின் போது தோமரர்கள் தில்லியைக் கைப்பற்றி ஆண்டனர். [1] தோமர குலத்தின் நிறுவனரான முதலாம் அனங்கபாலன் கி பி 736இல் தில்லியை நிறுவினார். [2]

தேஜாபாலன், மந்தனபாலன், கீர்த்திகாபாலன், லக்கன்பாலன் மற்றும் பிருதிவிபாலன் ஆகியோர் அனங்கபாலனின் வழித்தோன்றல்கள் எனக் கருதப்படுகின்றனர். [3] தோமார வம்சத்தின் இறுதி மன்னர், தில்லி ஆட்சியை தனது மருமகன் பிரிதிவிராச் சௌகானிடம் ஒப்படைத்தார். [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Swati Datta 1989, ப. 102.
  2. Sailendra Nath Sen 1999, ப. 339.
  3. Buddha Prakash 1965, ப. 182.
  4. P. C. Roy 1980, ப. 95.

ஆதார நூற்பட்டியல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோமரா&oldid=3592136" இலிருந்து மீள்விக்கப்பட்டது