உள்ளடக்கத்துக்குச் செல்

புத்தகுப்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புத்தகுப்தர் (Budhagupta) (சமக்கிருதம்: बुधगुप्त) (ஆட்சிக்காலம் கி பி 476 – 495), இரண்டாம் குமாரகுப்தருக்குப் பின் ஆட்சிக்கு வந்த 11வது குப்தப் பேரரசர் ஆவார். இவர் புருகுப்தரின் மகனாவார்.[1] புத்தகுப்தர் கன்னோசி மன்னருடன் கூட்டணி வைத்துக் கொண்டு, வட இந்தியாவிற்குள் நுழைந்த ஹூணர்களை விரட்டியடித்தார்.

தாமோதர்பூர் செப்பு பட்டயங்கள், புத்தகுப்தரின் இரண்டு ஆளுநர்களான பிரம்மதத்தன் மற்றும் ஜெயதத்தன், வடக்கு வங்காளத்தை நிர்வகித்தாக கூறுகிறது. மத்தியப் பிரதேசத்தின் பண்டைய நகரமான ஏரணில் கிடைத்த 48 அடி உயர கொடி மரம் போன்ற கல்தூண்[2] குறிப்புகளின் படி, வடக்கே யமுனை ஆறு தெற்கே நர்மதை ஆறு பாயும் பரப்புகளை ஆண்ட சுரேஷ்மிசந்திரன் எனும் அரசன் புத்தகுப்தரை மகாராஜா அழைத்தார் எனக் கூறுகிறது.[1] மதுராவில் கிடைக்கப் பெற்ற, புத்தகுப்தர் ஆட்சிக் காலத்திய கௌதம புத்தரின் சிற்பத்தில் உள்ள குறிப்புகள், புத்தகுப்தர் தனது ஆட்சிப் பரப்பை வடக்கு மதுரா வரை நீட்டித்ததாக கூறுகிறது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Raychaudhuri, H.C. (1972). Political History of Ancient India, Calcutta: University of Calcutta, p. 522
  2. Dr. Mohan Lal Chadhar, Eran Ki Tamrapashan Sasnkriti, Sagar, MP 2009, pp 11,பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-89740-07-5
  3. Agarwal, Ashvini (1989). Rise and Fall of the Imperial Guptas, Delhi:Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-0592-5, pp. 226–30

வெளி இணைப்புகள்

[தொகு]
அரச பட்டங்கள்
முன்னர் குப்தப் பேரரசர்
ஆட்சிக் காலம் கி பி 476 – 495
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்தகுப்தர்&oldid=3254588" இலிருந்து மீள்விக்கப்பட்டது