உள்ளடக்கத்துக்குச் செல்

செப்பேடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செப்புப் பட்டயம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

செப்பேடு என்பவை பழங்காலத்தில் மன்னர்களின் கோவில் தானங்கள், வம்சாவழி(பரம்பரை)[1] , போர்க்குறிப்புகள், மரபு வழிக்கதைகள் போன்ற நிகழ்வுகளைப் பதிந்து வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட உலோகத் தகடு ஆகும். இவை தற்காலத்தில் பழங்காலத்தைப் பற்றி அறியும் தொல்லியல் சான்றுகளாக இருந்து வருகின்றன. இவற்றில் சென்னை அருங்காட்சியகத்தில் இருக்கும் 280 செப்பேடுகளை படியெடுக்க -முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.[2]

இயற்கையாக ஓலைச்சுவடிகள் அழிவது போலச் செப்பேடுகள் அழிவது இல்லை. எனவே பண்டைய மக்கள் செப்பேடுகளைப் படிக்கவும் பாதுகாக்கவுமின்றிப் பூமியில் புதைத்து வைத்தனர். மேலும் பல செப்பேடுகள் உருக்கப்பட்டுப் பாத்திரங்களாக மாறின. செம்பின் உபயோகத்துக்காக பல செப்பேடுகள் அழிக்கப்பெற்றன. இவற்றை மீறி சில செப்பேடுகள் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்டன.

செப்பேடுகள் அவை கிடைத்த இடத்தைக் கொண்டோ அவை இருக்கும் இடத்தைக் கொண்டோ பெயரிடப்படுகின்றன. செப்பேடுகளை அவை கிடைக்கும் இடத்தை மட்டும் வைத்து அவ்விடத்திற்கே உரியது என்று கூறமுடியாது. ஏனெனில் செப்பேடுகளை எடுத்துச் செல்வது எளிமையாக இருப்பதன் காரணமாக ஓரிடத்திற்குரியவை வேறுபட்ட தொலைவான இடங்களில் கூடக் கிடைக்கலாம்.

இந்தியா

[தொகு]

இந்தியாவில் இதுவரையில் 1561 செப்பேடுங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றின் விவரம்:

மாநிலம் பட்டயங்களின் எண்ணிக்கை
தமிழ்நாடு 489
ஆந்திரப் பிரதேசம் 289
மகாராட்டிரம் 168
கருநாடகம் 162
குசராத்து 112
ஒரிசா 105
மத்தியப்பிரதேசம் 73
மேற்கு வங்காளம் 52
இராசத்தான் 50
பீகார் 32
அசாம் 11
கேரளா 9
மற்றவை 9

மேற்கோள்கள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செப்பேடு&oldid=3865247" இலிருந்து மீள்விக்கப்பட்டது