அட்சயப் பாத்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூரிய பகவான் அட்சயப் பாத்திரத்தினை தர்மனுக்குத் தருதல்

அட்சயப் பாத்திரம் என்பது இந்து தொன்மவியலின் படி, தர்மனுக்கு சூரிய பகவான் தந்ததாகும். இந்தப் பாத்திரத்தில் உணவு இட்டால், எடுக்க எடுக்க கொடுக்கும் தன்மையுடையது. இதனை வைத்தே பஞ்ச பாண்டவர்கள் தங்களுடைய வானப்பிரஸ்தம் காலத்தில் உணவை உண்டார்கள்.

ஒரு முறை துர்வாச முனிவர் துரியோதனன் அரண்மனைக்குச் சென்றார். அப்போது அவனுடைய உபசரிப்பில் மகிழ்ந்தவர் என்ன வரம் வேண்டும் என்று கேட்க, அதற்கு துரியோதணன் பஞ்ச பாண்டவர்கள் குடிலுக்குச் சென்று உணவருந்த வேண்டும் என்று கூறுகிறான். துர்வாசரும் அதனை ஏற்று தன்னுடைய சீடர்களுடன் பஞ்ச பாண்டவர்கள் குடிலுக்குச் செல்கிறார். அங்கு உணவினைச் சாப்பிட்டு முடித்துவிட்ட பாண்டவர்கள், அட்சயப் பாத்திரத்தினையும் கழுவி வைத்துவிட்டார்கள். துர்வாசர் தான் குளித்துவிட்டு வந்து உணவினை அருந்துவதாகக் கூறிவிடுகிறார். திரௌபதி கிருஷ்ணனை வேண்டி, தன்னைக் காக்கும்படி வேண்ட, கிருஷ்ணன் அட்சயப் பாத்திரத்திலிருந்த ஒரு சிறு இலையை உண்டார். அனைத்து உயிர்களுக்கும் உணவுண்ட திருப்தி உண்டானது. [1]

துர்வாசரும், அவருடையச் சீடர்களும் தங்கள் வயிறு நிரம்பியதைக் கண்டு பஞ்ச பாண்டவர்களிடம் மீண்டும் வராமல் சென்றனர்.

மணிமேகலையில்[தொகு]

மணிமேகலை இலக்கியத்தில் அட்சயப் பாத்திரத்தை ஒத்த அள்ள அள்ள உணவை வழங்கும் பாத்திரமாக அமுத சுரபி என்னும் பாத்திரம் சுட்டப்படுகிறது. இந்தப் பாத்திரத்தைக் கொண்டு ஆபுத்திரனும், மணிமேகலையும் வரியவர் பசியைப் போக்கினர்.

ஆதாரங்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-04-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-10-13 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்சயப்_பாத்திரம்&oldid=3540674" இருந்து மீள்விக்கப்பட்டது