திருதராட்டிரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருதராஷ்டிரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விதுரனின் வேண்டுதலுக்கு இணங்க சனத்சுஜாதர், திருதராட்டிரனுக்கு பிரம்ம ஞானம் உபதேசித்தல்

திருதராட்டிரன் , மகாபாரதக் கதையில் வரும் அத்தினாபுரத்தின் மன்னனான விசித்திரவீரியனின் முதல் மனைவி அம்பிகாவின் மகன் ஆவார். இவர் ஒரு பிறவிக்குருடர். காந்தாரி இவரது மனைவி ஆவார். திருதராட்டிரனுக்கு காந்தாரி மூலம் நூறு மகன்களும், துச்சலை எனும் ஒரு மகளும், பணிப்பெண் மூலம் யுயுத்சு என்ற மகனும் பிறந்தனர். இவரது மகன்களே கௌரவர்கள், இவர்களில் மூத்தவர் துரியோதனன் ஆவர். திருதராட்டிரன், பாண்டு மற்றும் விதுரனின் மூத்த சகோதரர் ஆகவும், பஞ்சபாண்டவர்களின் பெரியப்பாவாகவும் விளங்கினார். காந்தார தேசத்தின் இளவரசனும் சகுனி, காந்தாரியின் சகோதரன் ஆவார்.

குருச்சேத்திரப் போர் தொடங்குவதற்கு முன் திருதராஷ்டிரனுக்கு நீதிகளை கூறும் போது, சாகாநிலை பற்றி கூறுகிறார் விதுரர். கெளவர்கள் போரில் இறவாநிலையை அடைய வேண்டும் எனும் திருதராஷ்டிரனின் ஆசையை நிறைவேற்ற விதுரர், சனத்குமாரரை வரவழைக்கிறார். சனத்குமாரர், சாகாநிலையை அடையும் வழிகள் குறித்து திருதராஷ்டிரனுக்கு உபதேசிக்கிறார். [1] [2]

தலைமுறை அட்டவணை[மூலத்தைத் தொகு]

பிரதிபன் சுனந்தா
கங்கை சாந்தனு சத்தியவதி பராசரர் பாலிகன் தேவாபி
பீஷ்மர் சித்திராங்கதன் விசித்திரவீரியன் கிருட்டிண த்வைபாயனன்(எ) வியாசர் சோமதத்தன்
(அம்பிகா மூலம்) (அம்பாலிகா மூலம்) (பணிப்பெண் மூலம்)
திருதராட்டிரன் பாண்டு விதுரன் பூரிசிரவஸ் 2 மகன்கள்

மேற்கோள்கள்[மூலத்தைத் தொகு]

  1. பகுதி 41 முதல் 46பி முடிய சனத்சுஜாதர், திருதராட்டிரனுக்கு இறப்பற்ற வாழ்வு அடைவது குறித்து உபதேசிக்கும் காணொலி
  2. http://mahabharatham.arasan.info/2015/02/Mahabharatha-Udyogaparva-Section41.html

வெளி இணைப்பு[மூலத்தைத் தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருதராட்டிரன்&oldid=1871067" இருந்து மீள்விக்கப்பட்டது