இலக்குமணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்ணனுடன் எண்மனையாட்டி - 19ஆம் நூற்றாண்டு மைசூர் ஓவியம்.

இலக்குமணை என்பவள், கண்ணனின் எண்மனையாட்டிகளில் ஒருத்தியாகச் சொல்லப்படுகின்றாள். எண்மரில் இவள் எட்டாவது ஆவாள். இவள் வரலாறு, மகாபாரதம், பாகவதம், விஷ்ணு புராணம், அரிவம்சம், முதலியவற்றில் சொல்லப்படுகின்றது.[1]

தொன்மங்கள்[தொகு]

வீணை வாசிப்பதில் வல்லவரான[2] பிருகத்சேனரின் மகளாக இலக்குமனை சொல்லப்படுகின்றாள். மத்ரதேச இளவரசியாக, "மாத்திரி" என்ற பெயரில், இவள் பொதுவாகச் சுட்டப்படுகின்றாள்.[3][4]

விஷ்ணு புராணம்: இலக்குமணையை "சாருகாசினி" என்றழைப்பதுடன், அவளை எண்மனையாட்டியரில் ஒருத்தியாகக் குறிப்பிடும் போதும், "மாத்திரி" என்ற பெயரில், இன்னொருத்தியையும் சொல்கின்றது.[4]

பாகவத புராணம்: மத்திர நாட்டின் பெயர் தெரியா மன்னன் ஒருவனின் மகளாகவும், நற்குணங்கள் வாய்ந்தவளாகவும் இலக்குமணையை இனங்காட்டுகின்றது.[5]

பத்ம புராணம்: மத்திரநாட்டு மன்னனை, "பிருகத்சேனன்"' என்று அடையாளம் காட்டுகின்றது.[6]

அரி வம்சம்: இதுவும் அவளை "சாருகாசினி என்கின்றது. எனினும் விஷ்ணு புராணம் போலவே, மத்திரநாட்டுடன் இணைக்கவில்லை. "சுபீமை" எனும் பெயருடன் வேறொருத்தியை "மாத்திரி" என்ற பெயரில் எண்மனையாட்டியரில் ஒருத்தியாகக் குறிப்பிடுகின்றது.[7]

இலக்குமணைக்கு, அவள் தந்தை வைத்த மணத்தன்னேற்பில் கண்ணன் அவளைக் கவர்ந்துகொண்டதாக, பாகவத புராணம் விவரிக்கின்றது.[3][8] இன்னொரு கதையில், ஜராசந்தன், துரியோதனன் ஆகியோரே தவறவிட்ட விற்போட்டியொன்றில் வென்று, அவளைக் கண்ணன் மாலையிட்டதாகச் சொல்லப்படுகின்றது.அப்போட்டியில் அருச்சுனன் பங்குபற்றி, வேண்டுமென்றே தோற்றுப்போனதாகவும் பீமன் போட்டியில் கலந்துகொள்ளாது தவிர்த்ததாகவும் அக்கதை நீள்கின்றது.[9]

கண்னனும் அவனது எண்மனையாட்டியரும் ஒருமுறை அத்தினாபுரம் சென்றபோது,. நாணமும் கம்பீரமும் நிறைந்த இலக்குமணை, தன்னைக் கண்ணன் மணந்த வரலாற்றை திரௌபதியிடம் விவரிக்கின்றாள்.[2]

பிற்கால வாழ்க்கை[தொகு]

பாகவத புராணத்தின் படி, பிரகோசன், கத்திரவான், சிங்கன், பலன், பிரபலன், ஊர்த்துவகன், மகாசக்தி. சகன், ஓயன், அபராயிதன் என்று அவளுக்கு பத்துக் குழந்தைகள்.[10] விஷ்ணு புராணம், அவளுக்கு கத்திரவான் முதலான பல மைந்தர் இருந்ததைச் சுட்டிக் காட்டுகின்றது.[4] கண்ணனின் மறைவுக்குப் பின், அவனது ஏனைய தேவியர் போலவே இவளும் உடன்கட்டையேறித் தன்னுயிரை மாய்த்துக் கொண்டாள்.[11][12]

மேலும் பார்க்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Vettam Mani (1975). Puranic Encyclopaedia: a Comprehensive Dictionary with Special Reference to the Epic and Puranic Literature. Motilal Banarsidass Publishers. பக். 62. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8426-0822-0. https://archive.org/details/puranicencyclopa00maniuoft. 
  2. 2.0 2.1 Rakosh Das Begamudre; Pōtana (1988). Amrutha of Sreemad Bhagavatha: adapted and translated from the Telugu original of Kavi Bammera Pothana. Rakosh Das Beegamudre. http://books.google.com/books?id=e_IcAAAAMAAJ. பார்த்த நாள்: 7 February 2013. 
  3. 3.0 3.1 Prabhupada. "Bhagavata Purana 10.61.15". Bhaktivedanta Book Trust.
  4. 4.0 4.1 4.2 Horace Hayman Wilson (1870). The Vishńu Puráńa: a system of Hindu mythology and tradition. Trübner. பக். 81–3, 107-8. http://books.google.com/books?id=RO8oAAAAYAAJ&pg=PA82. பார்த்த நாள்: 21 February 2013. 
  5. Prabhupada. "Bhagavata Purana 10.58.57". Bhaktivedanta Book Trust. Archived from the original on 2011-09-20. பார்க்கப்பட்ட நாள் 2015-09-01.
  6. Vettam Mani (1975). Puranic Encyclopaedia: a Comprehensive Dictionary with Special Reference to the Epic and Puranic Literature. Motilal Banarsidass Publishers. பக். 448. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8426-0822-0. https://archive.org/details/puranicencyclopa00maniuoft. 
  7. "Harivamsha Maha Puraaam - Vishnu Parvaharivamsha in the Mahabharata - Vishnuparva Chapter 103 - narration of the Vrishni race". Mahabharata Resources Organization. பார்க்கப்பட்ட நாள் 25 January 2013.
  8. "Five Ques married by Krishna". Krishnabook.com. பார்க்கப்பட்ட நாள் 25 January 2013.
  9. Aparna Chatterjee (December 10, 2007). "The Ashta-Bharyas". American Chronicle. Archived from the original on 6 டிசம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 21 April 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. "The Genealogical Table of the Family of Krishna". Krsnabook.com. பார்க்கப்பட்ட நாள் 5 February 2013.
  11. Prabhupada. "Bhagavata Purana 11.31.20". Bhaktivedanta Book Trust. Archived from the original on 2010-06-13. பார்க்கப்பட்ட நாள் 2015-09-01.
  12. Kisari Mohan Ganguli. "Mahabharata". Sacred-texts.com. பார்க்கப்பட்ட நாள் 18 March 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலக்குமணை&oldid=3927857" இலிருந்து மீள்விக்கப்பட்டது