விக்ரமாதித்தியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


புராணக்கதையில் வரும், இந்தியாவில் உள்ள உஜ்ஜெய்னி நாட்டின் அரசர், விக்ரமாதித்யா (சமக்கிருதம்: विक्रमादित्य) (பொ.ஊ.மு. 102 ஆம் ஆண்டு முதல் பொ.ஊ.மு. 15 ஆம் ஆண்டு வரை). இவர் அறிவாற்றல், வீரம் மற்றும் தயாளகுணம் ஆகியவற்றுக்கு புகழ்பெற்றவராவார். பிற்காலத்தில் விக்ரமாதித்தியன் எனும் பெயர், இந்திய வரலாற்றில் வேறு பல அரசர்களால் வைத்துக்கொள்ளப்பட்டது, குறிப்பாக குப்த அரசர் இரண்டாம் சந்திரகுப்தர் மற்றும் சாம்ராட் ஹேம் சந்திர விக்ரமாதித்யா ('ஹெமு'என பலராலும் அறியப்பட்டவர்).

விக்ரமாதித்தியன் என்ற பெயர், "வீர தீரம்" என பொருள்படும் விக்ரம் (विक्रम)(vikrama ) மற்றும் அதிதியின் மகன் என பொருள்படும் ஆதித்ய (आदित्य)[[Āditya]] ஆகியவற்றிலிருந்து உண்டான, தத்புருஷர் என்று பொருள்படும் ஒரு சமஸ்கிருத சொல்லாகும். அதிதி அல்லது ஆதித்யாஸ் என்பவரது மிகவும் புகழ்பெற்ற மகன்களில் ஒருவர் சூரியன், சூரியக்கடவுள்; எனவே, விக்ரமாதித்யா என்பதன் பொருள் சூர்யா, "சூரியனுக்குச் சமமான வீரதீரம் கொண்ட (ஒருவர்)" எனவும் பொருள்படுகிறது. இவர் விக்ரமா அல்லது விக்ரமர்கா (சமஸ்கிருதத்தில் அர்கா எனில்சூரியன் என்று பொருள்) எனவும் அழைக்கப்படுகிறார்.

விக்ரமாதித்தியன் பொ.ஊ.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்வர். கதா-சரிதா-சாகராவில் குறிப்பிட்டுள்ளதுபடி, அவர் பரமரா வம்சத்தைச் சேர்ந்த, உஜ்ஜெய்னி நாட்டு அரசர் மஹேந்த்ராதித்யாவின் மகனாவார். இருப்பினும், கிட்டத்தட்ட பொ.ஊ. 12 நூற்றாண்டுகளுக்குப் பிறகு இது எழுதப்பட்டது. மேலும், மற்ற ஆதாரங்கள்படி விக்ரமாதித்யா டில்லியைச் சேர்ந்த [1][2][3][4][5] துவார் வம்சத்தின் ஒரு மூதாதையர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விக்கிரமாதித்யாவின் வாழ்க்கையைப் பற்றிய பிரபலமான இரண்டு நாட்டுப்புறக் கதைகளின் காரணமாகவே, இந்து குழந்தைகளுக்கு விக்ரம் எனப் பெயரிடுவது அதிகரித்து வருகிறது எனலாம்.

ஜைனத் துறவியின் குறிப்பு[தொகு]

கலாகாசார்யா அண்ட் தெ ஸகா கிங் (கலாகாசார்யா கதா-மேன்யுஸ்க்ரிப்ட்), சத்ரபதி ஷிவாஜி மஹராஜ் வாஸ்து ஸங்ராஹலயா, மும்பை.

இப்பேற்பட்ட அரசர் ஒருவர் இருந்திருப்பார் என்பது, ஒரு ஜைன முனிவர், மஹேஸர ஸூரி (பன்னிரண்டாம் நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்தவராக இருக்கலாம் - குறிப்பு மிகவும் முன்தேதியிட்டதாகவுள்ளது மற்றும் வரிசைக்கிரமப்படி சரியில்லை) எழுதிய "கலாகாசார்யா கதானகா"வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கதானகா ("ஒரு குறிப்புரை" எனப் பொருள்படும்), ஒரு புகழ்பெற்ற ஜைனத் துறவி கலாகாசார்யாவின் கதையைக் கூறுகிறது. அப்போதைய சக்திவாய்ந்த உஜ்ஜெய்னி நாட்டு அரசர் கர்தபில்லா, துறவியின் சகோதரி ஸரஸ்வதி என்ற கன்னித் துறவியைக் கடத்தியதாகவும். கோபமுற்ற துறவி, ஸ்கஸ்தானாவில் ஒரு ஷாஹியான ஸகா அரசரின் உதவியை நாடினாரென்றும். கடுமையான இடர்பாடுகளுக்கிடையில் (ஆனால் புரியாத புதிர்களின் உதவியால்) ஸகா அரசர் கர்தபில்லாவைத் தோற்கடித்துச் சிறைப்பிடித்ததாகவும், ஸரஸ்வதியை தாய்நாடுக்குத் திருப்பி அனுப்பியதாகவும். பின்னர் கர்தபில்லா மன்னிக்கப்பட்டு காட்டிற்குச் சென்றும்கூட அங்கு அவர் ஒரு புலியால் கொல்லப்பட்டாரென்றும், அவரது மகன், விக்ரமாதித்யா காட்டில் வளர்க்கப்பட்டதால் ப்ரதிஷ்தனாவிலிருந்து (தற்கால மஹாராஷ்டிரா) ஆட்சி செய்யவேண்டியிருந்ததாகவும். பிறகு, விக்ரமாதித்யா உஜ்ஜெய்னியை வென்று, சாகர்களை விரட்டியடித்து, இந்நிகழ்ச்சியின் நினைவுவிழாக் கொண்டாட்டமாக விக்ரம ஆண்டு என்ற புதிய காலத்தைத் தொடங்கினாரென்றும் இக்கதை கூறுகிறது.

விக்ரமாதித்யாவின் செவி வழிக்கதை[தொகு]

விக்ரமாதித்யாவின் செவி வழிக்கதை இந்தியாவில் சமஸ்கிருதத்திலும் பிராந்திய மொழிகளிலும் பிரபலமானது. அவரைப்பற்றிய கதைகள் அதிகமாக இருந்தாலும், அவரது பெயர் வரலாற்று விவரங்கள் தெரியாத எந்தவொரு நிகழ்ச்சி அல்லது நினைவுச்சின்னத்துடன் சுலபமாக தொடர்புபடுத்தப்படுகிறது. சமஸ்கிருதத்தில் மிகவும் பிரசித்திபெற்ற இரண்டு, வேதாள பஞ்ச்விம்ஷதி அல்லது பைதல்பச்சிஸி ("25 (கதைகள்) வேதாளம்பற்றியது") மற்றும் ஸிம்ஹாஸன-த்வாத்ரிம்ஷிகா ("32 (கதைகள்) சிம்மாசனத்தைப்பற்றியது", ஸின்ஹாஸன் பட்டீஸீ எனவும் கூறப்படுவது). இவை சமஸ்கிருதத்தில் மட்டுமல்லாமல் பிராந்திய மொழிகளிலும் பல்வேறு வடிவங்களில் உள்ளன.

வேதாளம் சொன்ன இருபத்தி ஐந்து கதைகள்: இதில் வேதாளமானது அரசரிடம் ஒவ்வொரு புதிர் கதயைக் கூறி முடிக்கும் போதும் ஒரு கேள்வியைக் கேட்கும் என்றும், ஒவ்வொரு சரியான பதிலுக்குப் பிறகும் தன்னிடமிருந்து சென்ற வேதாளத்தை அரசர் பிடிக்க முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. உண்மையில், அரசர் ஒரு சாதுவால், வேதாளத்தைக் கொண்டுவந்து அவரிடம் சேர்க்க கேட்டுக்கொள்ளப்பட்டார். ஆனால் கொண்டுவரும்போது பேசினால் வேதாளம் மீண்டும் அதன் இடத்திற்கே பறந்து போய்விடும் என்பதால்,கொண்டுவரும்போது ஒரு வார்த்தைகூட பேசக்கூடாது. அரசருக்கு விடை தெரியாமலிருந்தால் மட்டுமே அவர் மௌனமாக இருக்கலாம், இல்லையெனில் அவரது தலை வெடித்துச் சிதறிவிடும். துரதிர்ஷ்டவசமாக, ஒவ்வொரு வினாவிற்கும் அரசர் விடை கண்டுபிடித்துவிடுவதால், கடைசி வினா விக்ரமாதித்யாவை திகைக்கவைக்கும் வரை இருபத்து நான்கு முறை வேதாளத்தைப் பிடிப்பதும் அதனை தப்பியோட விடுவதும் தொடர்கிறது. கதா-ஸரித்ஸாகராவில் இக்கதைகளின் ஒரு வடிவம் பதிந்திருப்பதைக் காணலாம்.

சிம்மாசனத்தைப் பற்றிய கதைகள்: விக்ரமாதித்யா சிம்மாசனத்தை இழந்து, அது பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, அரசர் போஜ, பரமரா தர்நாட்டு அரசரால் மீட்கப்பட்ட சிம்மாசனத்தோடு தொடர்புபடுத்தப்படுகின்றன. பிறகு வந்த அரசரும் புகழ்வாய்ந்தவர். மேலும் இக்கதைகளின் தொகுப்பு, அவர் அந்த சிம்மாசனத்தில் அமர மேற்கொண்ட முயற்சிகள் பற்றியதாகும். கூறப்போகும் கதையில் சித்தரிக்கப்படுகின்ற விக்ரமாதித்யாவைப் போன்று தயாளகுணம் உடையவராய் இருந்தால் மட்டுமே அச்சிம்மாசனத்தில் ஏறி அமரமுடியும் என்று கூறும் பேசும் தன்மை வாய்ந்த 32 பெண் பதுமைகளால் (பொம்மைகளால்) இச்சிம்மாசனம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது போஜ அரசரின் 32 முயற்சிகளுக்கும் ஒவ்வொரு கதை என விக்ரமாதித்யாவின் 32 கதைகளுக்கும் வழிவகுக்கிறது. மேலும் ஒவ்வொறு முறையும் போஜ அரசர் தன் தாழ்வுத்தன்மையை ஒப்புக்கொள்கிறார். இறுதியாக, அப்பதுமைகள் அவரது அடக்கத்தைக் கண்டு மகிழ்ந்து அவரை சிம்மாசனத்தில் ஏறி அமர விட்டுவிட்டன.

விக்ரமாவும் சனியும்[தொகு]

சனியுடன் சம்பந்தப்பட்ட விக்ரமாதித்யாவின் கதை, பரவலாக கர்னாடகா மாநிலத்தில் யக்ஷகானாவில் கூறப்படுகிறது. கதையில் கூறப்படுவதுபடி, விக்ரமா நவராத்திரியை வெகு விமரிசையாகக் கொண்டாடும்போது, ஒவ்வொரு நாளும் ஒரு கிரகத்துடன் வாக்குவாதம் புரிந்தார். கடைசி நாள் சனிக்குடையதாயிற்று. பிராமணர், பூமியில் தர்மத்தை நிலைநாட்டுவதில் சனியின் பங்கு, அவரது சக்தி ஆகியவைகளைக் கொண்ட சனியின் சிறப்பியல்புகளை விளக்கினார். விக்ரமாவின் ஜாதகப்படி, சனி 12 ஆம் இடத்திற்கு வருவதால் அவருக்கு கஷ்டகாலமாக அமையும் என்பதயும் விழாவில் பிராமணர் கூறினார். இருப்பினும் விக்ரமா திருப்தியடையவில்லை; அவரது தந்தை (சூரியன்), குரு (பிரஹஸ்பதி) ஆகியோருக்கு கஷ்டத்தைக் கொடுத்த சனி ஒரு பிரச்சினையை உருவாக்கும் சாதாரண கிரகம் என்றே அவர் கருதினார். ஆகையால் விக்ரமா, சனி வணங்குதற்குறியவர் என்பதை ஒப்புக்கொள்ளத் தயாராயில்லை என்றார். விக்ரமா தன் சக்தியை எண்ணி, குறிப்பாக ஸ்ரீதேவியின் அருளினை முழுமையாகப் பெற்றிருப்பதையெண்ணி, மிகவும் பெருமை பட்டுக்கொண்டார். அவர் நவராத்திரி விழாவில் கலந்துகொள்ள வந்திருந்தவர்கள் முன்னால் சனியை ஏற்றுக்கொள்ள மறுத்ததால், சனி கோபமுற்றார். விக்ரமா அவரை வணங்கும்படி செய்யப்போவதாக அவர் (சனி) விக்ரமாவிடம் சவால்விட்டார். சனி வானில் மறைந்தபோது, அது ஒரு குருட்டு அதிர்ஷ்டமானது என்றும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள அவரிடம் வல்லமை இருப்பதாகவும் விக்ரமா கூறினார். பிராமணர் அவரது ஜாதகத்தைப்பற்றிக் கூறியது ஒருவேளை உண்மையாக இருக்கலாம் என விக்ரமா முடிவுக்கு வந்தாலும் சனியின் சிறப்பினை ஏற்றுக்கொள்ள அவர் மறுக்கிறார். "என்ன நடக்கவேண்டுமோ அது நடந்தேதீரும், எது நடைபெறுவதற்கு இல்லையோ அது நடக்கவே நடக்காது" என்று விக்ரமா கூறுவதுடன் சனியின் சவாலையும் அவர் ஏற்கிறார்.

ஒரு நாள் குதிரை வியாபாரி ஒருவன் அவருடைய அரசவைக்கு வந்து, விக்ரமாவின் அரசவையில் அவனுடைய குதிரையை வாங்க ஒருவரும் இல்லை என்று கூறினான். அக்குதிரை சிறப்பு அம்சங்களைக் கொண்டதாகக் கூறப்பட்டது - ஒரு அடிக்கு அது பறக்கும், இரண்டாவதற்கு அது பூமியில் இருக்கும். இவ்வாறு ஒருவர் பறக்கலாம் அல்லது பூமியில் சவாரி செய்யலாம். விக்ரமாவால் நம்பமுடியவில்லை, எனவே குதிரைக்கானப் பணத்தைக் கொடுப்பதற்குமுன் அதைப் பரிசோதிக்கவேண்டும் என்று அவர் கூறி, குதிரைமேல் உட்கார்ந்து குதிரையை அடிக்கிறார். வியாபாரி கூறியதுபோல், குதிரை அவரை வானத்திற்குக் கொண்டுசென்றது. இரண்டாவது அடிக்கு, அது பூமிக்கு வந்திருக்கவேண்டும், ஆனால் அது வரவில்லை. மாறாக, அது விக்ரமாவை நெடுந்தொலைவுக்குக் கொண்டுசென்று ஒரு காட்டில் வீசியெறிந்தது.

விக்ரமா காயமடைந்து, அவரிடத்திற்குத் திரும்பிவர முயற்சிக்கிறார். இவையெல்லாம் விதியைத்தவிர வேறொன்றிமில்லை என்று அவர் சொல்கிறார்; குதிரை வியாபாரி வடிவில் வந்தது சனி என்பதைக் கண்டுகொள்ள அவர் தவறிவிடுகிறார். காட்டில் அவர் வழி காண முயற்சிக்கும்போது, கொள்ளையர் கூட்டம் ஒன்றால் அவர் தாக்கப்பட்டு, அவருடைய எல்லா ஆபரணங்களையும் இழக்கின்றார். விக்ரமா இன்னமும் அந்நிலை குறித்து கவலைப்படாமல் கொள்ளையர்கள் அவருடைய கிரீடத்தைதான் எடுத்துச் செல்ல முடிந்தது, அவருடைய தலையை அல்ல என்று கூறுகிறார்.

அவர் கீழ்நோக்கி நடந்துவந்து அருகில் உள்ள ஆற்றில் உள்ள நீரைப் பருக வருகிறார். வழவழப்பான நிலம் அவரை தண்ணீருக்குள் தள்ளி, தண்ணீரின் வேகம் அவரை நெடுந்தொலைவுக்கு இழுத்துச்சென்றது. எப்படியோ சமாளித்து நிதானமாக விக்ரமா ஒரு நகரத்தை அடைந்து பசியோடு ஒரு மரத்தடியில் உட்காருகிறார். விக்ரமா உட்கார்ந்திருந்த மரத்திற்கு எதிரில், பணத்தையே குறிக்கோளாகக் கொண்ட ஒரு கடைக்காரர் தன் கடையை வைத்திருந்தார். விக்ரமா அம்மரத்தடியில் உட்கார்ந்த நாள் முதல், கடயில் வியாபாரம் குறிப்பிடும்படி உயர்ந்தது. இந்நபர் வெளியில் அமர்ந்திருப்பதே அதிக பணம் வரக்காரணம் என்று கடைக்காரரின் பேராசை அவரை நினைக்கவைத்தது, விக்ரமாவை அவருடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று உணவளிக்க அவர் தீர்மானித்தார். நீண்ட கால வியாபார விருத்தியை எதிர்நோக்கி, அவர் தன் மகளை விக்ரமாவை மணந்துகொள்ளும்படி கூறுகிறார். உணவு உண்டபின், விக்ரமா அறையில் உறங்கிக்கொண்டிருக்கும்போது, அவரது மகள் அறைக்குள் வந்து விக்ரமா எழுந்திருக்கும்வரை படுக்கைக்குப் பக்கத்தில் காத்திருக்கிறாள். அவளுக்கு மெல்ல தூக்கம் வருகிறது. அவளுடைய ஆபரணங்களை எடுத்து வண்ண வாத்து வரையப்பட்ட ஆணியில் தொங்கவிடுகிறாள். அவள் ஆழ்ந்து தூங்கிவிடுகிறாள். விக்ரமா எழுந்திருக்கும்போது, வண்ணவரைவில் உள்ள வாத்து ஆபரணங்களை விழுங்கிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறார். அவர் பார்த்ததை நினைவுபடுத்திக்கொண்டிருக்கும்போது, கடைக்காரரின் மகள் விழித்தெழுந்து ஆபரணங்கள் காணாமல் போயிருப்பதைப் பார்க்கிறாள். அவள் அவளது தந்தையை அழைத்து அவன் ஒரு திருடன் எனக்கூறுகிறார்.

அப்பிராந்திய அரசரிடம் விக்ரமா அழைத்துச்செல்லப்படுகிறார். விக்ரமாவின் கால்களையும் கைகளையும் வெட்டி அவரை பாலைவனத்தில் விட்டுவிட அரசர் தீர்மானிக்கிறார். பாலைவனத்தில் இரத்த காயத்துடன் நகர்வதற்கு போராடிக்கொண்டிருக்கும்போது, ஒரு பெண் அவளுடைய தந்தையின் வீடு உள்ள உஜ்ஜெயினிலிருந்து அவளுடைய கணவன் வீட்டிற்குத் திரும்பிச் செல்லும் வழியில் விக்ரமாவைப் பார்த்து அவரை அடையாளம் கண்டுகொள்கிறாள். அவருடைய சூழ்நிலையைப் பற்றி கேட்டறிந்து, குதிரைச் சவாரிக்குப்பின் அவர் காணாமல் போனது பற்றி மக்கள் துயருற்றுள்ளனர் என்று கூறுகிறாள். அவளுடைய கணவனின் உடன்பிறந்தாரிடம் அவளது வீட்டில் அவரைத் தங்கவைக்க வேண்டுகிறாள், அவர்கள் அவரைத் தங்கவைத்துக்கொள்கின்றனர். அவளுடைய குடும்பம் வேலைசெய்து பிழைக்கவேண்டிய பிரிவைச் சேர்ந்தது; விக்ரமா ஏதேனும் வேலை கொடுக்கும்படி கேட்கிறார். மாடுகள் சுற்றித்திரிந்து தானியங்களைப் பிரித்தெடுக்கும் வகையில், அவர் நிலத்தில் உட்கார்ந்து கூச்சலிடுவதாகக் கூறுகிறார். மற்றவரின் விருந்தாளியாக எப்போதும் வாழ அவர் தயாராக இல்லை.

ஒரு மாலைவேளை விக்ரமா வேலை செய்துகொண்டிருந்தபோது, காற்றடித்து விளக்கு அணைந்துவிடுகிறது. அவர் தீபக ராகத்தைப் பாடி விளக்கேற்றுகிறார். இது நகரத்தின் எல்லா விளக்குகளையும் ஏற்றியது - நகரத்தின் இளவரசி தீபக ராகத்தினைப் பாடி யார் விளக்கேற்றுகிறாரோ அவரைத் திருமணம் செய்துகொள்வதாக சபதம் செய்திருந்தார். அந்த இசை இந்த ஊனமுற்றவரிடமிருந்து வந்தது கண்டு ஆச்சரியப்பட்டாள், ஆனால் அவரைத் திருமணம் செய்துகொள்ள தீர்மானித்தாள். முன்பு நடந்த திருட்டுக் குற்றச்சாட்டினை ஞாபகப்படுத்திக்கொண்டு, இப்போது தன் சொந்த மகளை மணம் முடிக்க முயற்சிக்கிறார் என்று விக்ரமாவப் பார்த்ததும் அரசர் கோபமடைகிறார். விக்ரமாவின் தலையை துண்டிப்பதற்கு அவர் தன் உடைவாளை எடுக்கிறார். அந்நேரத்தில், விக்ரமா இவையெல்லாம் சனியின் சக்தியால் நிகழ்கின்றன என்பதை உணர்கிறார். அவர் இறக்கப்போகும் நேரத்தில், அவர் சனியை பிரார்த்திக்கின்றார். அவருடைய தவறுகளை ஒப்புக்கொண்டு, அவரின் நிலையைப் பற்றி மிகவும் பெருமையடந்ததையும் அவர் ஒப்புக்கொள்கிறார். சனி தோன்றி அவருடைய ஆபரணங்கள், கால்கள், கைகள் மற்றும் எல்லவற்றையும் அவருக்குத் திருப்பியளிக்கிறார். அவர் அனுபவித்தது போன்ற துன்பத்தினை சாதாரண மக்களுக்குக் கொடுக்கவேண்டாம் என்று விக்ரமா சனியை வேண்டுகிறார். அவர்போன்ற வலுவானவர் துன்பத்தைத் தாங்கிக்கொள்ள முடியும், ஆனால் சாதாரண மக்களால் முடியாது என்று அவர் கூறுகிறார். அதை ஏற்றுக்கொண்டு, சனி அவ்வாறு செய்யப்போவதில்லை என்று கூறுகிறார். அடையாளங்கண்டு, அரசர் அவருடைய பேரரசரிடம் சரணடைந்து தன் மகளையும் அவருக்கு மணமுடிக்க ஒப்புக்கொள்கிறார். அதே சமையம், கடைக்காரர் அரண்மனைக்கு ஓடிவந்து வாத்து தன் வாயிலிருந்து ஆபரணத்தினை வெளிவிட்டது என்று கூறுகிறார். அவரும் தன் மகளை பேரரசருக்கு கொடுக்கிறார். விக்ரமா உஜ்ஜெயினிக்கு திரும்பிவந்து, சனியின் அருளோடு பேரரசராக வாழ்கிறார்.

நவ ரத்தினங்களும் உஜ்ஜெய்னி அரசவையும்[தொகு]

தன்வந்திரி, க்ஷபனகா, அமரசிம்ஹா, ஷன்கு, கடகர்பரா, காளிதாசர், வேதாள்பட் (அல்லது வேதாள்பட்டா), வராருச்சி மற்றும் வராஹமித்ரா ஆகியோர் உஜ்ஜெய்னியில் விக்ரமாதித்யாவின் அரசவையில் ஓர் அங்கமாக இருந்ததாக இந்திய மரபுவழி கூறுகிறது. அரசரிடம் இதுபோன்ற புகழ்பெற்ற "நவரத்னா" (இலக்கியரீதியாக, ஒன்பது ரத்தினக்கற்கள்) என்றழைக்கப்பட்ட ஒன்பதுபேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.

காளிதாசா புராணங்களில் வரும் சமஸ்கிருதப் புலவர். வராஹமித்ரா, விக்ரமாதித்யாவின் மகனுடைய இறப்பை முன்கூட்டியே கணித்துச் சொன்ன, அக்காலத்து பிரசித்திபெற்ற ஒரு குறிசொல்பவர் வேதாள்பட் ஒரு மகா பிராமணர். விக்ரமாதித்யாவுக்கு சமிர்ப்பிக்கப்பட்ட பதினாறு பிரிவுகளைக்கொண்ட "நீதி-ப்ரதீபாவை" (Niti-pradīpa , இலக்கியரீதியாக, "நடத்தையின் ஒளி விளக்கு") எழுதியவர்.

विक्रमार्कस्य आस्थाने नवरत्नानि

धन्वन्तरिः क्षपणको मरसिंह शंकू वेताळभट्ट घट कर्पर कालिदासाः। ख्यातो वराह मिहिरो नृपते स्सभायां रत्नानि वै वररुचि र्नव विक्रमस्य।।

விக்ரமார்கஸ்ய ஆஸ்தானே நவரத்னானி

தன்வந்த்ரிஹி க்ஷிபணகோ மரசிம்ஹ ஷாங்கு வேதாளபட்ட கட கர்பர காளிதாஸாஹ க்யதோ வராஹ மிஹிரோ ன்ருப்தே ஸ்ஸபாயம் ரத்னானி வை வராருசி ர்னவ விக்ரமஸ்ய

விக்ரம ஸம்வத் (விக்ரம சகாப்தம்)[தொகு]

இந்திய மரபுப்படி இந்தியா மற்றும் நேபாளத்தில், பரவலாகப் பயன்படுத்தப்பட்ட முற்கால நாட்காட்டி விக்ரம ஸம்வத் அல்லது விக்ரம சகாப்தம் ஆகும். புராணகால அரசர் பொ.ஊ.மு. 56ல் சகர்களை வென்றதைத் தொடர்ந்து அந்த அரசரால் இது தொடங்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

குறிப்புதவிகள்[தொகு]

  • தெ கதா ஸரித் ஸாகரா, அல்லது ஓஷன் ஆஃப் தெ ஸ்ட்ரீம்ஸ் ஆஃப் ஸ்டோரி , 1880 ஆம் ஆண்டில் ஸி.ஹெச்.டாவ்னியால் மொழிபெயர்க்கப்பட்டது.
  • 1870 ஆம் ஆண்டில் ரிச்சர்ட் ஆர்.பர்டனால் மொழிபெயர்க்கப்பட்ட விக்ரம் அண்ட் தெ வெம்பைர்
  • தெ இன்ரோட்ஸ் ஆஃப் தெ ஸிதியன்ஸ் இண்டு இண்டியா, அண்ட் தெ ஸ்டோரி ஆஃப் கலாகசார்யா , தெ ராயல் ஆஸியாடிக் ஸொஸைடியின் பாம்பே கிளையின் பத்திரிகை, வால்யூம் IX, 1872
  • விக்ரமா'ஸ் அட்வென்சர்ஸ் அல்லது தெ தர்டி-டூ டேல்ஸ் ஆஃப் தெ த்ரோன் , ஸமஸ்கிருத மொழியில் உள்ள மூலத்தின் (விக்ரம-சரிதா அல்லது ஸின்ஹாஸனா-த்வத்ரிம்ஷிகா) அடிப்படையில் நான்கு முறை வெவ்வேறாக திருத்தியமைக்கப்பட்டது, ஃப்ராங்க்லின் எட்கெர்டனால் 1926 ஆம் ஆண்டில் ஹார்வார்ட் யூனிவர்சிடி ப்ரஸ்ஸில் மொழிபெயர்க்கப்பட்டது.

குறிப்பு[தொகு]

  1. ஜேம்ஸ் ப்ரின்ஸெப், எட்வர்ட் தாமஸ், ஹென்றி தோபி ப்ரின்ஸெப், ஜே.முர்ரே ஆகியோரால் 1858 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட எஸ்ஸேய்ஸ் ஆன் ஆண்டிகுடீஸ் , பக்கம் 250.
  2. 2000 ஆம் ஆண்டில் ஆஸியன் எஜுகேஷனல் ஸர்வீஸஸ், எம். எஸ். நடேசன் எழுதிய ப்ரீ-முஸல்மான் இந்தியா , பக்கம் 131.
  3. 1885 ஆம் ஆண்டில் எட்வர்ட் பல்ஃபோர், பி.க்வாரிட்ச் எழுதிய தெ ஸைக்லோபீடியாஆஃப் இண்டியா அண்ட் ஆஃப் ஈஸ்டர்ன் அண்ட் சதர்ன் ஆஸியா , பக்கம் 502
  4. 1920 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் டோட், வில்லியம் க்ரூக் எழுதிய ஆனல்ஸ் அண்ட் ஆண்டிகுடீஸ் ஆஃப் ராஜஸ்தான் , பக்கம் 912.
  5. ஜேம்ஸ் ப்ரிஸெப், எட்வார்ட் தாமஸ், ஹென்றி தோபி ப்ரிஸெப், ப்யூப்ல் எழுதிய எஸ்ஸேய்ஸ் ஆன் இண்டியன் ஆண்டிகுடீஸ்,நூமிஸ்மேடிக், அண்ட் பாலியோக்ராஃபிக், ஆஃப் தெ லேட் ஜேம்ஸ் ப்ரின்ஸெப் . ஜே.முர்ரே, 1858, பக்கம் 157.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்ரமாதித்தியன்&oldid=3593014" இருந்து மீள்விக்கப்பட்டது