குமாரசம்பவம்
குமாரசம்பவம் (Kumārasambhavam) (சமக்கிருதம்: Kumārasambhavam), காளிதாசன் சமசுகிருத மொழியில் இயற்றிய காவியக் கவிதையாகும். வசந்த காலத்தின் போது இயற்கையின் அழகை கவிதைகளால் விளக்கும் பாணி வியப்புக்குரியது.[1]குமாரசம்பவம் நாடகக் கவிதை சிவ – சக்தி அருளால் உருவான குமரனின் பிறப்பின் வரலாற்றை விளக்குகிறது. [2] இந்நூல் கி பி ஐந்தாம் நூற்றாண்டில் காளிதாசரால் இயற்றப்பட்டது.
பின்னணி
[தொகு]வால்மீகி இராமாயணத்தின் பாலகாண்டத்தில் குமாரசம்பவம் கதை இடம்பெற்றுள்ளது. விஸ்வாமித்திரர் இராமரையும், இலட்சுமணரையும், தனது யாக வேள்வியின் காவலுக்கு அழைத்துச் செல்லும்போது, சிவ – சக்திக்கு பிறந்த குமரனின் வரலாற்றை இருவருக்கும் கூறுகிறார்.
வரலாறு
[தொகு]இராமாயணத்தில் வரும் இவ்வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, காளிதாசன் குமாரசம்பவம் எனும் காவியக் கவிதையை நவரசங்களில் எழுதியுள்ளார். இந்நூலில் குமரனின் பிறப்பு மற்றும் தேவர்களின் படைத்தலைவராக முருகன் இருந்து, சூரபத்மன், சிங்கமுகன் மற்றும், தராகாசூரன் ஆகிய அரக்கர்களை போரில் முருகன் வென்று, இந்திரன் முதலான தேவர்களை அரக்கர்களிடமிருந்து விடுவிக்கும் சம்பவங்களை குமாரசம்பவம் நூல் விளக்குகிறது.
பிரபல கலாசாரத்தில்
[தொகு]காளிதாசரின் குமாரசம்பவம் நூலின் கதை, தமிழ் மற்றும் மலையாளப் திரைப்படமாக குமார விஜயம் 1969-ல் வெளிவந்துள்ளது.[3]
மேற்கோள்கள்
[தொகு]ஆதார நூற்பட்டியல்
[தொகு]- Hank Heifetz (1 January 1990). The Origin of the Young God: Kālidāsa's Kumārasaṃbhava. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0754-9.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)
வெளி இணைப்புகள்
[தொகு]- full text of the Kumārasambhava in Devanāgarī script பரணிடப்பட்டது 2010-10-03 at the வந்தவழி இயந்திரம் (first eight sargas)
- full text of the Kumārasambhava in Roman script at GRETIL
- The Birth of the War-God, selected translation by Arthur W. Ryder
- single folio of a Kumārasambhava manuscript in the Cambridge University Library
- [1] Attempted English translation of text by RTH Griffith