சிவ மகா புராணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிவ மகா புராணம் என்னும் நூல் 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த திருமலைநாதர் என்பவரால் இயற்றப்பட்ட தமிழ்நூல். இந்த நூலால் இவர் ‘புராணத் திருமலைநாதர்’ என்று சிறப்பு அடைமொழியுடன் வழங்கப்படுகிறார். இந்த நூல் வடமொழியிலுள்ள சிவ புராணத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல். இந்த வடமொழி நூல் முழுவதுமாக மொழிபெயர்க்கப்படவில்லை. சரப புராணம். ததீசி புராணம், வினாவிடைப் புராணம், சிதம்பர புராணம் என்னும் நான்கு பகுதிகள் மட்டுமே திருமலைநாதரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவ_மகா_புராணம்&oldid=1397348" இருந்து மீள்விக்கப்பட்டது