உள்ளடக்கத்துக்குச் செல்

திருமலைநாதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருமலைநாதர், 16ஆம் நூற்றாண்டில் வடமொழியிலுள்ள மகாசிவபுராணம் என்னும் நூலைத் தமிழில் சிவ மகா புராணம் என்னும் நூலாக்கிப் புராணத் திருமலைநாதர் எனப் பாராட்டப்பட்டவர். வடமொழியிலிருந்த புராணத்தை இவர் முழுமையாக மொழிபெயர்க்கவில்லை. அதில் காணப்பட்ட சரப புராணம், ததீசி புராணம், வினாவிடைப் புராணம், சிதம்பர புராணம் என்னும் நான்கு பகுதிகள் மட்டுமே இவரால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன.[1]

கருவிநூல்

[தொகு]
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005

அடிக்குறிப்பு

[தொகு]
  1. இவை தஞ்சை சரசிவதி மகால் நூல்நிலையத்தில் முதல் மூன்று நூல்களும் 279a, 279b, 279c என்று எண்ணிடப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. சிதம்பர புராணம் தனி நூலாகப் பாதுகாக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமலைநாதர்&oldid=3882459" இலிருந்து மீள்விக்கப்பட்டது