உள்ளடக்கத்துக்குச் செல்

அவந்திபோரா

ஆள்கூறுகள்: 33°55′24″N 75°00′46″E / 33.9232602°N 75.012846°E / 33.9232602; 75.012846
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அவந்திபோரா
ஊந்த்பூர்
அவந்திபூர், அவாந்திபூர்,
நகரம்
அவந்திசுவாமி கோயில் இடிபாடுகள்
அவந்திசுவாமி கோயில் இடிபாடுகள்
அவந்திபோரா is located in ஜம்மு காஷ்மீர்
அவந்திபோரா
அவந்திபோரா
ஜம்மு காஷ்மீரில் அவந்திபோராவின் அமைவிடம்
அவந்திபோரா is located in இந்தியா
அவந்திபோரா
அவந்திபோரா
அவந்திபோரா (இந்தியா)
ஆள்கூறுகள்: 33°55′24″N 75°00′46″E / 33.9232602°N 75.012846°E / 33.9232602; 75.012846
நாடு இந்தியா
ஒன்றியப் பகுதிஜம்மு காஷ்மீர்
மாவட்டம்புல்வாமா
ஏற்றம்
1,582 m (5,190 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்6,250
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுஜேகே13
பாலின விகிதம்/
இணையதளம்pulwama.gov.in

அவந்திபோரா (Awantipora) அல்லது அவந்திபூர் [1] அல்லது அவாந்திபூர், [2] காஷ்மீரியில் ஊந்த்பூர் எனவும் அழைக்கப்படும் இது, இந்தியாவின் ஒன்றியப் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜீலம் ஆற்றங்கரையிலுள்ள ஒரு நகரமாகும். இது ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் (இப்போது தேசிய நெடுஞ்சாலை 44 என அழைக்கப்படுகிறது) ஸ்ரீநகருக்கு தெற்கிலும், அனந்தநாக்கின் வடக்கிலும் உள்ளது. அவந்திபோராவுக்கு காஷ்மீர் மன்னர் அவந்திவர்மனின் பெயரிடப்பட்டது. மேலும் அவர் கட்டிய 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு இந்துக் கோவில்களின் இடிபாடுகள் இன்றும் உள்ளன.

அவந்திபோரா வட்டமானது புல்வாமா மாவட்டத்தின் துணைப்பிரிவாகும். [3] இது காஷ்மீரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. [4]

வரலாறு

[தொகு]

உத்பால வம்சத்தின் முதல் மன்னராக இருந்த அவந்திவர்மனால் இந்த நகரம் நிறுவப்பட்டது என்றும் அவன் கி.பி 855 முதல் 883 வரை காஷ்மீரை ஆண்டதாகவும் கூறப்படுகிறது. [5] அவந்திவர்மன் அவந்திபோராவில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட "அவந்திசுவாமி கோயில் " என்று அழைக்கப்படும் ஒரு இந்துக் கோவிலைக் கட்டினான். தான் அரசனாவதற்கு முன்பு அவந்திபோராவில் "அவந்தீசுவரர்" என்று அழைக்கப்படும் இரண்டாவது இந்து ஆலயத்தை சிவனுக்கு அர்ப்பணித்தார். இரண்டு கோயில்களும் விசாலமான செவ்வக நடைபாதை முற்றங்களில் கட்டப்பட்டன. அவை பிற்காலத்தில் அழிவைச் சந்தித்தன. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் தயாராம் சகானி என்பவரால் இது கண்டுபிடிக்கப்பட்டது. அவந்திசுவாமி கோயில் 33 ° 55′24 ″ வடக்கிலும் 75 ° 00′46 ″ கிழக்காகவும், அவந்தீசிவரர் கோயில் 33 ° 55′41 ″ வடக்கிலும் 75 ° 00′16 ″ கிழக்கிலும் அமைந்துள்ளது. அவை இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.

புள்ளிவிவரங்கள்

[தொகு]

2001 இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி,[6] அவந்திபோராவில் 6,250 என்ற அளவில் மக்கள் தொகை இருந்தது. இதில் ஆண்களில் 54% பேரும் பெண்களில் 46%எனவும் உள்ளனர். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அவந்திபோராவின் சராசரி கல்வியறிவு விகிதம் 84.38% ஆகும். இது தேசிய சராசரியான 74% ஐ விட அதிகமாகும். ஆண்களின் கல்வியறிவு 91.84% ஆகவும், பெண் கல்வியறிவு 82.55% ஆகவும் 9% மக்கள் தொகையில் 6 வயதுக்குட்பட்டவர்கள்.

அவந்திபோராவில் சமயம்
இந்து சமயம்
36.48%
இசுலாம்
61.17%
சைனம்
0.01%
கிறித்துவம்
0.69%
சீக்கியம்
1.45%
பிறர்
0.22%
மதப் பரவல்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Corlett, Dudley S. (1923), "The Gardens of Kashmir", Art and Archeology, The Archeological Society of Washington, affiliated with the Archeological Institute of America, p. 27
  2. "Annual Report 1976-77", Ministry of Education and Social Welfare, Government of India, p. 223, 1976
  3. "About District/ Administrative Setup/ Tehsil", Pulwama District, Government of Jammu and Kashmir, பார்க்கப்பட்ட நாள் 22 July 2020
  4. http://distancebetween2.com/srinagar/awantipora
  5. "Avantiswami Temple, Avantipur". Archeological Survey of India. பார்க்கப்பட்ட நாள் 23 July 2016.
    This web-page spells the town Avantipur, and says that it is in Anantnag district, which it was before the creation of Pulwama district in 1979.
  6. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  7. "Directory/Public Utilities/Banks", Pulwama District, Government of Jammu and Kashmir, பார்க்கப்பட்ட நாள் 23 July 2020

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவந்திபோரா&oldid=3152121" இலிருந்து மீள்விக்கப்பட்டது