வங்காளப் பஞ்சம், 1770

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வங்காளப் பஞ்சம், 1770 (Bengal famine of 1770), 1769-1783 காலகட்டத்தில் இந்தியாவின் வங்காளப் பகுதிகளைத் தாக்கிய ஒரு பெரும் பஞ்சம். கீழ் கங்கைச் சமவெளிப் பகுதிகளைத் (தற்கால மேற்கு வங்காளம், வங்காளதேசம், ஒரிசா மற்றும் பீகார்) பாதித்த இப்பஞ்சத்தால் ஏறத்தாழ ஒரு கோடி மக்கள் மாண்டனர்.[1][2]

18ம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் பிளாசி மற்றும் புக்சார் சண்டைகளின் விளைவாக வங்காளம் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனியின் ஆட்சியின் கீழ் வந்தது. தனது வருவாயைக் கூட்ட கிழக்கிந்திய நிறுவனம், நிலவரியினைக் கூட்டியது. மேலும் உணவுப் பயிர்களுக்கு பதில் அவுரி போன்ற பணப்பயிர்கள் பயிரிடலை ஊக்குவித்தது. 1768-69 இல் அரிசி விளைச்சல் குறைந்தது, கடும் வறட்சியும் நிலவியது. ஆனால் கம்பனி நிருவாகிகள் இதனை எதிர்கொள்ள எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 1770 இல் இந்நிலை பெரும் பஞ்சமாக மாறி மக்கள் லட்சக்கணக்கில் மடியத்தொடங்கினர். பஞ்சத்தை சமாளிக்க கம்பனி நிருவாகம் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவில்லை. ஏறத்தாழ பத்து லட்சம் பேர் பட்டினியால் மாண்டனர். வங்காளத்தின் மொத்த மக்கள் தொகையில் இது மூன்றில் ஒரு பங்காகும். 1770 ஆம் ஆண்டு நல்ல மழை பெய்து, அதிகமான விளைச்சல் ஏற்பட்டதால் பஞ்சத்தின் கடுமை குறைந்தது.[3][4]

மேலும் பார்க்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வங்காளப்_பஞ்சம்,_1770&oldid=3352147" இருந்து மீள்விக்கப்பட்டது