இந்து விதவைகள் மறுமணச் சட்டம், 1856

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்து விதவைகள் மறுமணச் சட்டம், 1856 பிரிவு XV என்பது 25 சூலை 1856 அன்று இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இந்து விதவைகளின் மறுமணத்தைச் சட்டச் செல்லுபடியாக்கியது. இச் சட்டம் அக் காலத்தில் இந்தியாவை ஆண்ட பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தால் கொண்டுவரப்பட்டது.

இந்து சமயத்தில் விதவைகள் ஒதுக்கப்பட்டவர்களாகவும், விதவைகள் மறுமணம் புறக்கணிக்கப்பட்டதாகவும் இருந்து நெடுங்காலமாக இருந்து வந்தது. குறிப்பாகக் குடும்பத்தின் கௌரவத்தையும், சொத்தையும் பேணவும் இது அவசியம் என்று இந்துக்களால் கருதப்பட்டது. இச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஈஸ்வர சந்திர வித்யாசாகர் அவர்களின் பங்களிப்பு முக்கியமானது.